இணையத்தில் வைரலாகும் 'தல' அஜித்துடன் 'குட்டித் தல' புகைப்படம்

இணையத்தில் வைரலாகும்  தல அஜித்துடன் குட்டித் தல புகைப்படம்
X

நடிகர் அஜித்துடன் அவரது மகன் ஆத்விக்.

நடிகர் அஜித்துடன் அவரது மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவான 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், நடிகர் அஜித் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தாஜ் மஹால் உள்ளிட் இடங்களுக்கு சென்ற அவர், வாகா எல்லையில் கையில் தேசியக்கொடி ஏந்தியப்படியும், அங்கிருந்த ராணுவ வீரர்களுடன்நின்று புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத்தொடர்ந்து, பாலைவனத்தில் அமர்ந்து அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது 'தல' அஜித்துடன் அவரது மகன் 'குட்டி தல' ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. ஹெல்மெட் போட்டவாறு ஆத்விக் காணப்படும் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்