தான் சாகவில்லை.. திடுக்கிடச் செய்த பிரபல வில்லன் நடிகரின் இறப்பு செய்தி!
பிரபல வில்லன் நடிகர் இறந்துவிட்டதாக செய்தி பரவ இதனை அறிந்த ரசிகர்களுக்கும் வில்லன் நடிகரின் உறவினர்களுக்கும் பேரதிர்ச்சி. திடீரென வில்லன் நடிகரே வந்து நான் சாகவில்லை என்று வீடியோவில் பேசியிருக்கிறார். இது பலருக்கும் முக்கியமாக அவரது குடும்பத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லன் நடிகர்களுக்கு எப்போதும் அதிக பரீட்சியம் இருக்கும். மொழிகளைக் கடந்து வில்லன்கள் ரசிக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தனது வித்தியாசமான நடிப்பு முறையால் ஈர்த்து பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் கோட்டா சீனிவாசராவ். இவரது சாமி படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. கோ படத்தில் இவரது நடிப்பு தனித்தன்மை நிறைந்ததாக இருந்தது. இப்படி பல படங்களில் வில்லன்களாகவும் சில படங்களில் குணச்சித்திர, காமெடி வேடங்களிலும் நடித்திருக்கிறார் கோட்டா சீனிவாசன்.
இவர் இறந்துவிட்டதாக செய்தி ஒன்று காலையிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. தொலைக்காட்சி சேனல்களும் இதனை அறிந்து கொள்ள கோட்டாவின் வீட்டுக்கே ஃபோன் செய்து விசாரித்து வந்துள்ளனர். அவரது உறவினர்களும் இதனை அறிந்து அவர்களுக்கு கால் செய்து பேச வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நன்றாக இருக்கும் ஒரு மனிதனை இறந்துவிட்டதாக செய்தி பரப்பி தர்ம சங்கடத்தை ஏன் ஏற்படுத்துகிறார்கள் என தெரியவில்லை. இப்போது கோட்டா சீனிவாச ராவே வீடியோவில் பேசியிருக்கிறார்.
80 வயதான கோட்டா சீனிவாசன் இது வதந்தி என்றும் தான் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட கோட்டா, தான் வலிமையுடனும் நலமுடனும் இருப்பதாகவும் யாரும் தேவையற்ற வதந்தியைப் பரப்பாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu