வெளிநாட்டு படத்துக்கு ஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் 'கூழாங்கல்' தேர்வு

வெளிநாட்டு படத்துக்கு ஆஸ்கர் விருது:  இந்தியா சார்பில் கூழாங்கல் தேர்வு
X

கூழாங்கல் படத்தில் ஒரு காட்சி.

ஆஸ்கர் திரைப்பட விருதுகளில், வெளிநாட்டு திரைப்பட பிரிவுக்கு, இந்தியா சார்பில் 'கூழாங்கல்' திரைப்படம் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, வரும் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் 'சிறந்த வெளிநாட்டு திரைப்படம்' என்ற பிரிவில், இந்திய திரைப்படத்தை அனுப்ப, தேர்வுக்குழுவினர் கொல்கத்தாவில் கூடினர்.

இதில், 'சர்தார் உத்தாம்', 'ஷேர்னி', 'செல்லோ ஷோ', 'நாயாட்டு' மற்றும் தமிழ் திரைப்படங்ள் 'கூழாங்கல்' 'மண்டேலா' உள்பட 14 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன், டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே, டைகர் விருதை வென்றுள்ளது. இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிகிறது.

Tags

Next Story
the future of ai in healthcare