கோலிவுட்டில் கதைகளுக்கு தட்டுப்பாடு? பார்ட்-2.பார்ட்-3 படங்களில் ஆர்வம் காட்டும் சினிமா டைரக்டர்கள் .....

கோலிவுட்டில் கதைகளுக்கு தட்டுப்பாடு?  பார்ட்-2.பார்ட்-3 படங்களில் ஆர்வம்   காட்டும்  சினிமா டைரக்டர்கள் .....
X

சென்னைகோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட சினிமா உலகந்தான் கோலிவுட்  (கோப்பு படம்)

kollywood , deficit of tamil film stories தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதை இருந்தால் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் படைக்கும். ஆனால் இக்கால படங்கள் அதுபோல் சாதிப்பதில்லையே ஏன்? நல்ல கதைகள் இல்லாததா? படிங்க...

kollywood , deficit of tamil film stories

தமிழக கோலிவுட்டில் கதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா? பார்ட்-2. பார்ட்-3 படங்களில் டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருவதேன் என்பது ரசிகர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது வெளியாகும் படங்களில் போதுமான கதையம்சம் இல்லாததால்தான் தோல்வியைத் தழுவி விடுவதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

kollywood , deficit of tamil film stories


தமிழ் சினிமா உலகிற்கு பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் மறைந்த பாலகுமாரன் அவருடன் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். (கோப்பு படம்)

சினிமாவுக்கு கதை முக்கியம்

தமிழகத்தில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்களில் முக்கிய கதையம்சம் உள்ள படங்கள் அனைத்தும் தோற்றதாய் சரித்திரம் இல்லை. சொல்லப்போனால் கோடம்பாக்கம் கோலிவுட்டில் அக்காலத்தில் கதாசிரியர்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள் பலர். அதில் சுஜாதா, பாலகுமாரன், எழுத்தாளரும் பின்னர் டைரக்டர்களாகிய கே. பாலசந்தர், கே.பாக்யராஜ், ஜெ. மகேந்திரன், மெளலி, கிரேஸிமோகன், உள்ளிட்ட பலரைச்சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் 1950 முதல் 1970 வரை வெளியான் படங்களில் கதைதான் முக்கிய அம்சமாக இருந்தது. எஸ்.எஸ். வாசன் கொத்தமங்கலம் சுப்புவின் பல கதைகளைப் படமாக்கியுள்ளார்.

kollywood , deficit of tamil film stories


தமிழ் சினிமாவில் ஜாம்பவானான கதாசிரியரும் வசன கர்த்தாவுமான மறைந்த எழுத்தாளர் ரங்கராஜன் எனும் சுஜாதா (கோப்பு படம்)

kollywood , deficit of tamil film stories

மேலும் டைரக்டர் விசு, அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி என்கிற கிஷ்மூ, டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் பல பரிமாணங்களில் திரையுலகில் கோலோச்சினர். டி. ராஜேந்தர் அவரது படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள் என பன்முக திறமையோடு படமெடுத்த காலங்கள் எல்லாம் அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விசுவின் படங்கள் அனைத்துமே குடும்பங்களை மையமாக வைத்து எடுத்த படங்கள்தான். இதனால் அவரது பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

கதைகளுக்கு தட்டுப்பாடா?

கோலிவுட்டில் முன்னளி நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றோரின் படங்கள் அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பு மிக்கதாய் இன்றளவில் திகழ்கிறது. இவர்கள் நடிக்கும் படங்களில் கதை அம்சம் முக்கியத்துவம் பெறும். அதாவது சமூக நிகழ்வின் அடையாளம் காணப்படும். அந்த அளவிற்கு அவர்கள் கால்ஷீட் கொடுக்கும் முன்னரே பல கதாசிரியர்களிடம் கதைக்கேட்டு அதன்பின்தான் நடிக்கவே ஒப்பந்தமாகின்றனர். அதனால்அவர்களுடைய படங்கள் அனைத்துமே வெற்றியைத் தழுவுவதாகும், வசூலில் சாதனை படைப்பதாகவும் உள்ளது.

kollywood , deficit of tamil film stories


kollywood , deficit of tamil film stories

ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பல படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் தோல்வியைத் தழுவின என்று கூட சொல்லலாம். கோலிவுட்டில் நல்ல கதாசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விக்குறியானது ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.இதனால் பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்க்ள ஏற்கனவே வெற்றி படங்களின் கதையினைத் தொடர்ச்சியாக வைத்து படமெடுக்கத் துவங்கியுள்ளனர்.

பார்ட்-2,மற்றும் பார்ட்-3

தமிழகத்தில் ரிலீசாகி வசூலில் சாதனைப் படைத்த படங்களான சிங்கம், சாமி, காஞ்சனா போன்ற படங்கள் அனைத்துமே அதன் பார்ட் 2 மற்றும் பார்ட் 3 கதைகளை வெளியிட்டன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியினை இப்படங்கள் தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சாமி, பார்ட்-2 மட்டும் வெளியானது இதுவும் அதுபோல்தான். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே ரசிகர்களின் மத்தியில் எடுபடுகிறது. மற்றவைகள் எல்லாம் ஏதோ பொழுது போக்கிற்காக பார்ப்பவைகளாகத்தான் உள்ளன என தெரிவிக்கின்றனர்.

kollywood , deficit of tamil film stories


kollywood , deficit of tamil film stories

இனியாவது நல்ல படங்கள் வெளியாகுமா?

தமிழகத்தில் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த இரட்டையர்களாக திகழ்ந்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. ஒருவர் ஏழைகளின் மனதில் இன்றும் குடியிருப்பவர்.மற்றவர் கண்களாலே தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். இவர்களிருவர் நடித்த படங்கள் அனைத்திலும் கதை கரு இருந்தது. இதனால் அவர்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர். ஆனால் தற்போது வெளியாகும் பல படங்களில் கதையம்சம் என்பது துளி கூட இல்லை. அப்படி இருந்தாலும் கன்டினியூட்டி இருப்பதில்லை.இதனால் பார்க்கும் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. வருடக்கணக்கில் படம் எடுப்பவர்கள் கூட சில நேரங்களில் கதைகளில் கோட்டை விட்டுவிடுவார்கள். பணம் அதிக செலவு செய்வது முக்கியம் அல்ல. கிராமப்புறங்களில் எடுத்து வெற்றிப்படங்களை அன்று டைரக்டர் பாரதிராஜா தரவில்லையா?அக்காலத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சம் , பாடல்கள், ஒளிப்பதிவு, நகைச்சுவை என அனைத்து பரிமாணங்களிலும் ஒளிர்ந்ததால் இன்றளவில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. ஆனால் இன்று வெளிவரும் படங்களின் கதைகள் நிலையாய் நிலைத்திருப்பதில்லையே ஏன்?

எனவே இனி வெளிவரும் படங்களிலாவது 3 மணி நேரம் அமர்ந்து ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து அதனைப் படம் பிடித்து வெளியிட்டால் அது நிச்சயம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil