'வாரிசு' படத்தில் விஜய்யுடன் குஷ்பூ..!

வாரிசு படத்தில் விஜய்யுடன் குஷ்பூ..!
X

பைல் படம்.

நடிகை விஜய்யின் 'வாரிசு' படத்தில் பிரபல நடிகையான குஷ்பூ 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்.

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'வாரிசு' திரைப்படத்தின் ஃப்ஃர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளில் அமர்க்களமாக வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து வெளியான 'வாரிசு' படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் விறுவிறு என வளர்ந்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அத்துடன் சரத்குமார், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'மின்சாரா கண்ணா' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பூ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் 'வாரிசு' படத்தில், விஜய்யுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதுதான் புதிய சர்ப்ரைஸ்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!