இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன்! KH233 எப்போ?

இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன்! KH233 எப்போ?
X
இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன்! KH233 எப்போது துவங்கும் என கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது KH233 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் ஐதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், விபத்து, கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் தூசி தட்டப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் 6 மணிநேரத்திற்கு அதிகமாக இருப்பதாகவும் அதனால் படத்தின் அடுத்த பாகத்தை வெளியிடலாம் என்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளனர்.

இந்தியன் 3 படம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் வெளியாகும்போது அது அரசியல் மேடையாக மாறும் என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே இந்தியன் 3 படத்தின் எஞ்சிய காட்சிகளுக்காக 40 நாட்கள் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹெச் வினோத் -கமல் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போயுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் இணையவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக நடைபெறவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தேர்தல் பிரசாரத்தில் கமல் இணைவார் என்றும் தேர்தலையடுத்தே மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்

இந்தியன் 2 படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தியன் 2 படத்தின் அடுத்த பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் இணைகிறார்.

இந்தியன் 3 படத்தின் எஞ்சிய காட்சிகளுக்காக 40 நாட்கள் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தியன் 3 படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள KH233 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போயுள்ளது.

KH233 படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும்.

தேர்தல் பிரசாரத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள KH234 படத்தின் சூட்டிங்கில் இணைவார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!