KH233 ஹெச் வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்! படத்துல இப்படி ஒரு விசயம் இருக்கா?

KH233 ஹெச் வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்! படத்துல இப்படி ஒரு விசயம் இருக்கா?
X
கமல்ஹாசனுடன் ஹெச் வினோத் இணையும் புதிய படத்தில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா என வியந்து பேசி வருகின்றனர் இணைய வாசிகள்.

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து ஹெச் வினோத்துடன் இணைய இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் முதல் முறையாக ஹெச் வினோத்துடன் இணைய இருக்கிறார்.

விக்ரம் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கிய கமல்ஹாசனுக்கு அந்த படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ச் ஒர்க், ஒரு பாடல் உள்ளிட்ட 10 நாட்களுக்கான படம்தான் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அதிக வாய்ப்பு எழுந்துள்ளது.

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து ஹெச் வினோத் படத்தில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய பேரதிர்ச்சியாக புராஜக்ட் கே படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு. அந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசனும் சேர்ந்து நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தற்போது ஹெச் வினோத் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதிலும் இந்த படத்தின் கதை ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்த தலைவன் இருக்கிறான் எனும் கதைதான் என சிலர் பேசி வருகின்றனர். ஆனால் இது ஹெச் வினோத் எழுதிய கதை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!