பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் 'கே.ஜி.எஃப்.' ஹீரோ..?!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் கே.ஜி.எஃப். ஹீரோ..?!
X

நடிகர் யஷ் 

பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் 'கே.ஜி.எஃப்' பட ஹீரோ யஷ் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் பரபரவென பற்றிப்படர்கிறது.

தமிழ்த் திரையுலகில் பிரமாண்ட இயக்குநர் என்றாலே, இயக்குநர் ஷங்கர்தான் என்பது எல்லோருக்கும் எளிதாகத் தெரிந்த விஷயம்தான். தற்போது, இயக்குநர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்க 'ஆர்.சி-15' மற்றும் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் புராஜக்ட் சம்பந்தமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், இதில் அவர் முதலில் 'இந்தியன் - 2' படத்தை முடித்துவிட்டு, ராம் சரணின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் திரைத்தகவல் விவரம் அறிந்தவர்கள்.

இதனிடையே, இயக்குநர் ஷங்கர் 'வேள்பாரி' என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் ஒன்று இணையத்தில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. மேலும், தற்போது அப்படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, அப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் மற்றும் கரண் ஜோகர் இணைந்து தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, அப்படத்தில் 'கே.ஜி.எஃப்' படப்புகழ் நடிகர் யஷ் நாயகனாக நடிப்பார் என்றும் அவர் அண்மையில், இயக்குநர் ஷங்கரை சந்தித்தாகவும் தகவல் ஒன்று உலா வருகிறது என்கிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!