ஒரு துளி மேக்கப் இல்லை... கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படம்!

ஒரு துளி மேக்கப் இல்லை... கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படம்!
X
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா தமிழ், அப்பா மலையாளம். நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா தமிழ், அப்பா மலையாளம். நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மலையாளத்தில் திலீப், சுரேஷ் கோபி ஆகியோரின் படங்களில் குழந்தையாக நடித்திருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

2015ம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் செய்யப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நேனு சைலஜா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் மிகப் பெரிய பெயரைப் பெற்று அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமான கீர்த்தி, தமிழில் ரஜினிமுருகன், தொடரி, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 என தொடர் தோல்விகளை பரிசாக பெறுகிறார். ஆனால் தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்தபடங்கள் வெற்றி பெறுகின்றன. பைரவா படம் தோல்வியடைந்திருந்தாலும் சர்க்கார் படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பிய கீர்த்தி, அதற்கு முன் மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டார்.


அதன்பிறகு பென்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்த, மர்க்கார், குட் லக் சகி, சாணி காயிதம், வாஷி என தொடர் தோல்விப் படங்களையே கொடுத்துள்ளார். இப்போது நடித்துள்ள தசரா படத்தின் வெற்றியை மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இத்தனை படங்கள் தமிழில் நடித்தாலும் பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை என்பது கீர்த்தி சுரேஷின் கதைத் தேர்வை தான் குறை சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் நல்ல திறமை வாய்ந்த நடிகையாக இருந்த பிறகும் இதுபோன்ற ஸ்க்ரிப்டுகளை ஏன் ஒத்துக் கொள்கிறார் என்பதுதான் தெரியவில்லை. மேக்கப் இன்றி கூட அழகாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் துளி கூட மேக்கப் இன்றி அழகாக காட்சி தருகிறார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி