கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!

கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு 20 கிலோ எடையைக் குறைத்திருந்தார். இதற்காக அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் நடிக்கும் படங்கள் வெளிவரும்போதெல்லாம் தனி கவனம் பெறும். இதுமட்டுமின்றி இவர் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்த பிறகு நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விக்ரம், விஷால், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகப் பெரிய நடிகையாக மாறினார். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு 20 கிலோ எடையைக் குறைத்திருந்தார். இதற்காக அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உடல் எடையைக் குறைக்கும் போது வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டாராம். அசைவ உணவுகளையும் தவிர்த்துள்ளார்.

தினமும் 30 நிமிடங்கள் கார்டியோ, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்திருக்கிறார். வெயிட் லிஃப்ட்டிங் செய்து உடலைக் குறைத்துள்ளார்.

Tags

Next Story