கயல் மனசுக்குள் புகுந்த சூர்யா! கயல் சொன்னது என்ன தெரியுமா?

கயல் மனசுக்குள் புகுந்த சூர்யா!  கயல் சொன்னது என்ன தெரியுமா?
X
கயல் தன்னை காதலித்து திருட்டுத்தனமாக திருமணமும் செய்து கொண்டதாகவும் தன்னை விட்டு பிரிந்து வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் திரும்பி வரவில்லை எனவும் கூறி வீட்டு வந்தவன் சூர்யா, இப்போது கயலின் மனதில் நுழைந்துவிட்டான்.

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 9th June 2023


கயலைக் கோபப்படுத்தி அவள் மனதுக்குள் இருக்கும் உண்மையை அவள் வாயாலேயே வெளியில் சொல்ல வைக்க நாடகமாடி உள்ளே வந்திருக்கிறான் சூர்யா என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 8th June 2023

கயல் தொடரின் நேற்றைய எபிசோடில் கயல் சோகத்துடனும் கோபத்துடனும் அமைதியாக அமர்ந்திருக்க அங்கே அவளது அம்மா வந்து நிலைமையை விசாரிக்கிறார். கயல் கயல் என இருமுறை கூப்பிட்டு, நான் ஒன்னு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.. பொய் சொல்லாம உண்மையை சொல்லுப்பா என அந்த பையன் கால்ல விழாத குறையாக கேட்டுட்டேன் ஆனா அத அவ்ளோ உறுதியா சொல்றான். நீ எதுவும் எங்ககிட்ட மறைக்கலல என்கிறார் அம்மா.

இதனால் ஷாக் ஆன கயல், அம்மா இப்படி கேட்டதும் என்ன நம்பலல. நீ இப்படி ஒரு கேள்விய கேட்ப என நான் நினைக்கவே இல்ல. என்ன முழுசா நம்ப வேண்டிய நீயே இப்படி கேட்டத நினச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனால ஏற்கனவே நான் ரொம்ப நொந்து போயிருக்கேன். அத விட அதிகமா நோகடிக்காதீங்கமா.. என்று கூற, அம்மாவ மன்னிச்சுடுமா நான் கேட்ட விதம் தப்பா இருக்கலாம் உன் மேல இருக்குற அக்கறைல நான் தப்பா கேட்டுட்டேன் இவ்வாறு இருவரும் இந்த நாடக விசயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் உன்னையும் இந்த பையனையும் சேர்த்து வச்சி பேசிட்டு இருக்காங்க. கேக்கவே கஷ்டமா இருக்கு. இதனால உன் வாழ்க்கையே மோசமாயிடும்போல இருக்கு என்று கூறி அழ ஆரம்பிக்கிறார். அவரை கயல் சமாதானம் செய்து இந்த விசயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறாள் கயல்.

அந்த நேரத்தில் கயலுக்கு ஒரு கால் வருகிறது. அட்டென்ட் செய்து பேசும்போது அது எழில் என்பது தெரியவருகிறது. இன்னும் அந்த பொறுக்கி ராஷ்கல் உங்க வீட்லதான் இருக்கானா என்று கேட்கிறான் எழில். தான் கமிஷனரிடம் பேசி அவனை முடிச்சிக்கட்டுவதாக கேட்க, அதற்கு என் மானம் போயிடும் நிறைய பேருக்கு தெரிஞ்சிடிச்சு. இது வேற மாதிரிதான் டீல் பண்ணனும். சூர்யாவோட ஒட்டுமொத்த பின்புலத்த கண்டுபிடிக்கனும்னு கூற அதன்பிறகு எழில் ஃபோனை வைக்கிறார்.

சோகத்தில் இருந்த கயல், அவரது மருத்துவரை தான் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கும் மருத்துவரிடம் சூர்யா பற்றி தெரிவிக்க, அதனை வில்லன் டாக்டர் கௌதம் ஒட்டு கேட்கிறான். சூர்யா தன்னை ஒருமுறைதான் பார்த்து பேசியிருப்பதாகவும், இப்போது தன்னை திருமணம் செய்துவிட்டதாக கூறி பிரச்னை பண்ணிக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறாள். இந்த விசயத்தை சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாக கூறுகிறாள். சூர்யாவின் பேக்ரவுண்ட்டை செக் செய்வதாக மருத்துவர் டீன் கூறுகிறார். கௌதமை அழைக்க டீன் முடிவு செய்ய , கௌதம் மகிழ்ச்சியடைகிறான். கௌதமுக்கு டீன் கால் செய்கிறார்.

சூர்யாவைப் பற்றிய தகவல்களைத் திரட்டி தனக்கு தருமாறு டீன் கேட்க, கௌதமும் சரி ஓகே பண்ணித் தரேன் என்று தெரிவிக்கிறார். ஆனால் இது கயலுக்கான உதவி என்பது தெரிந்து இதனை வைத்து கேம் ஆட முடிவு செய்கிறான். கயலுக்கு சூர்யாவைப் பற்றி எதுவும் தெரியாமல் அவள் கன்பியூஸாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறான். தகவல்களை எடுத்துக் கொண்டு வந்து டீனிடம் கொடுக்க, அவனைப் போக சொல்கிறார் டீன். பின் சூர்ய பிரகாஷ் முகவரியை கயலுக்கு சொல்லி, இவன் யாரு என்ன என விசாரிக்க சொல்கிறார் டாக்டர்.

எழிலுடன் சேர்ந்து கயல் இந்த முகவரிக்குச் சென்று சூர்யாவைப் பற்றி விசாரிக்கிறார். அங்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவரிடம் எழில் உங்க பேரன் தப்பானவர் என்று சொல்ல, அந்த பாட்டி கோபப்படுகிறார். பின் நடந்த அனைத்தையும் கூறுகிறான் எழில். ஆனால் முகவரி மாறிவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு இருவரும் வெளியே செல்கிறார்கள்.

முகவரி மாறியதில் டாக்டர் கௌதம் வேலை இருப்பதை அறியாமல், லிஸ்ட்டில் இருக்கும் இன்னொரு சூர்யாவைத் தேடி செல்கிறார்கள் இருவரும். அங்கு வீட்டில் ஆளே இல்லை என்பதால் ஷாக் அடைகிறார்கள். விரைவில் அவனைக் கண்டுபிடிப்போம் என்று கூறிவிட்டு எழில் கயலை அழைத்துச் செல்கிறான்.

மூர்த்தி மீண்டும் குடிப்பழக்கத்தை கையிலெடுக்கிறான். குடிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு மனதில் கஷ்டம் இருப்பதாக கூறி குடிக்கிறான் மூர்த்தி. தங்கையைப் பற்றி எல்லாரும் தப்பா நினைப்பாங்க பேசுவாங்க என மொடாக்குடி குடிக்கிறான் மூர்த்தி. தடுப்பவனை அடிக்கிறான். அங்கு குடித்துக் கொண்டிருப்பவனை போட்டு பொளக்கிறான். இதனால் பாரில் சண்டை நிகழ்கிறது. பாட்டிலை எடுத்து மண்டையைப் பொளக்கிறான் மூர்த்தி.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 10th June 2023

பெரியப்பா தர்மலிங்கம் தனது மகள் கல்யாணம் நடக்கவேண்டும் என மூர்த்தியின் குழந்தையைக் கடத்திவிட்டு மொத்த குடும்பத்தையும் அல்லல்பட வைக்கிறார். அந்த சயமத்தில் பந்தக்கால் சரிந்து விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!