Kayal குழந்தையைக் காப்பாற்ற எழில் எடுத்த ரிஸ்க்! இன்னொரு திட்டம் போடும் தர்மலிங்கம்!

Kayal குழந்தையைக் காப்பாற்ற எழில் எடுத்த ரிஸ்க்! இன்னொரு திட்டம் போடும் தர்மலிங்கம்!
X
மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி பெரியப்பா தர்மலிங்கம் தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என காட்டுகிறார். அடைக்கப்பட்ட பழைய குடோனில் தவறுதலாக மாட்டிக் கொண்ட அனுவை, கயல், எழில், மூர்த்தி மூவரும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி பெரியப்பா தர்மலிங்கம் தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என காட்டுகிறார். அடைக்கப்பட்ட பழைய குடோனில் தவறுதலாக மாட்டிக் கொண்ட அனுவை, கயல், எழில், மூர்த்தி மூவரும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 26th May 2023

தொலஞ்சுப் போன மகள திரும்ப கொண்டு வந்து சேர்த்துரு என்று அனுவின் அம்மா கடவுளிடம் வேண்டுகிறார். பெரியப்பா தர்மலிங்கம் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார் என்பதை அறியாத மூர்த்தியும், கயலும் அனு அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்றும் அவளை காப்பாற்ற முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறார்கள். எப்படியாவது காப்பாற்றி விடலாம் என கதவை உடைக்க முயற்சித்து பார்க்கிறான் மூர்த்தி. அந்த நேரத்தில் எழில் வேறொரு பாதை வழியாக உள்ளே நுழைந்து அனுவைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.

கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 24th May 2023

மூர்த்தியின் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கும் அடியாளுக்கு கால் செய்கிறார் பெரியப்பா தர்மலிங்கம். குழந்தையை பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு அந்த அடியாள் அண்ணே அதெல்லாம் நிறைய பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருக்கிறோம் நீங்க கவல படாதீங்க. என்ன ஒன்னு அந்த பாப்பா அழுதுட்டே இருக்கு என்கிறான்.

அதற்கு பெரியப்பா தர்மலிங்கம் கடத்தி வச்சிருந்தா பாப்பா அழாம, டிவிங்கிள் டிவிங்கிள்னு பாட்டா படிச்சிட்டு இருக்கும் என்று கூறுகிறார். பத்திரமாக வைத்துக் கொள், வீட்டு ஆளுங்க போலீஸ் ல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாங்க என்று கூறுகிறார். பின் அழைப்பைத் துண்டிக்கிறார்.

கயல், எழில், மூர்த்தி மூவரும் ஒரு வீட்டின் முகவரியை தெரிந்துகொண்டு வருகிறார்கள். அந்த வீட்டின் கதவு மூடப்பட்டு கிடக்கிறது. உடனே அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒருவரை அடித்து துவைக்கிறார் மூர்த்தி. கயலும், எழிலும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதைக் கேட்காமல் மூர்த்தி அந்த நபரை அடித்து நொறுக்க, அவர் தவறான நபர் என்பது தெரியவந்ததும் வருத்தத்தில் வெளியே வருகிறான். கயலும், எழிலும் வெளியே வந்து மூர்த்தியை சமாதானம் செய்ய, எழில் ஒரு ஐடியாவை செய்கிறான்.

காவல்துறையில் பணிபுரியும் தன் நண்பரிடம் உதவி கேட்டு சிசிடிவி ஃபுட்டேஜ் அனைத்தையும் செக் செய்ய சொல்கிறான். உடனே அவரும் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். பின் மூர்த்தி நொந்து அழுகிறான். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என அழுகிறான். பின் எல்லாரும் காரில் கிளம்பி செல்கிறார்கள்.

நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் காவல்துறை நண்பர் சைதாப்பேட்டையில் கூவம் ஓரம் செல்வதாக கண்டுபிடித்து சொல்கிறார். பின் தான் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாகவும் உடனே தனக்கு சொல்லும்படியும் கூறிவிட்டு போனை வைக்கிறார்.

இந்நிலையில், பெரியப்பா தர்மலிங்கத்துக்கு ஒரு ஃபோன் வருகிறது. எழிலின் அம்மா அவருக்கு அழைத்துள்ளார். அவரிடம் மூர்த்தியின் குழந்தை காணாமல் போயிவிட்டாரா என்று கேட்கிறார். எழிலும் பந்தக்கால் நட்ட உடனே வெளியே போய்விட்டான் என்று கூறுகிறார். குழந்தையை நீங்க தானே கடத்துனீங்க என்று எழிலின் அம்மா கேட்கிறார். இதனால் பதைபதைத்த தர்மலிங்கம் தான் கடத்தவில்லை என்று கூறுகிறான். சத்தியமாக நான் கடத்தவில்லை என்று தெரிவிக்கிறார் தர்மலிங்கம். தப்பா எடுத்துக்காதீங்க என்று எழிலின் அம்மா தர்மலிங்கத்திடம் கூறுகிறார்.

மூர்த்தியின் குழந்தை அனுவை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. காமாட்சி என் காலுல வந்து விழுவா, மூர்த்தி கதறிக்கிட்டு வருவான். நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் அந்த பொண்ண விட்டுருவோம் என்று வடிவிடம் சொல்கிறார் தர்மலிங்கம்.

குழந்தை அனு இருட்டறையில் பதைபதைத்துக் கொண்டிருக்கிறார். பயந்து போய் அம்மா அம்மா என்று அழுதுகொண்டே இருக்கிறார். அவரிடம் ரௌடி ஒருவர் சாப்பிட என்ன வேண்டும் என்று கூறுகிறார். அவர் பரிதாபப்பட்டு வெளியில் சென்று பிரியாணியும் பாப்பா சாப்பிட எதாவது வாங்கி வருவதாக சொல்லிச் செல்கிறார். பார்த்து சூதானமாக இருக்கும்படி 3 ரௌடிகளிடம் கூறிவிட்டு வெளியில் வருகிறார்.

அதே தெருவில் எழில், கயல், மூர்த்தி ஆகியோர் கையில் மொபைலுடன் அந்த ஆம்னி காரைத் தேடி வருகிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி அனைவரிடமும் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டோக்காரர், பிரியாணி கடைக்காரர், பிளாஸ்டிக் கடை என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

அந்தநேரத்தில் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கும் ரௌடி பாப்பாவுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் கொண்டு, பிரியாணி பொட்டலங்களையும் வாங்கிச் செல்கிறான். அதனை கவனித்த எழில் அவனை ஃபாலோ செய்யலாம் என்று கூறி காரில் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 27th May 2023

பெரியப்பா தர்மலிங்கம் தனது மகள் கல்யாணம் நடக்கவேண்டும் என மூர்த்தியின் குழந்தையைக் கடத்திவிட்டு மொத்த குடும்பத்தையும் அல்லல்பட வைக்கிறார். அந்த சயமத்தில் பந்தக்கால் சரிந்து விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!