Kayal எழில் திருமணத்தை நடத்த மூர்த்தியின் குழந்தையைக் கடத்திய பெரியப்பா! என்ன செய்யப்போகிறார் கயல்?

Kayal எழில் திருமணத்தை நடத்த மூர்த்தியின் குழந்தையைக் கடத்திய பெரியப்பா! என்ன செய்யப்போகிறார் கயல்?
X
ரௌடிகளிடமிருந்து கயல் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய எழில் வீட்டுக்கு வந்து கயலை விட்டுவிட்டு செல்கிறான். ஆனால் கயல் வீட்டில் திடீரென்று பிரச்னை. குழந்தையைக் காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ரௌடிகளிடமிருந்து கயல் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய எழில் வீட்டுக்கு வந்து கயலை விட்டுவிட்டு செல்கிறான். ஆனால் கயல் வீட்டில் திடீரென்று பிரச்னை. குழந்தையைக் காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 22nd May 2023

திருமணத்தை எப்படியாவது நல்லபடியாக நடத்தி முடித்துவிட வேண்டும் என எழிலின் அம்மா துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் எழிலின் அப்பா எழிலை பாராட்டிக் கொண்டிருக்கிறார். நீ அப்படியே என்ன மாதிரி அழகா இருக்க. அதோ பாரு உன் ஆளு கயல் அங்க நிக்குறா. டைம் வேஸ்ட் பண்ணாம இம்ப்ரஸ் பண்ணு என்று சொல்கிறார். அப்போது கயலுக்கு ஒரு கால் வருகிறது. அதில் பேசிய கயலின் அண்ணி பாப்பா அனுவைக் காணோம் என்று அதிர்ச்சி குண்டைத் தூக்கி போடுகிறார்.

அனு நம்ம வீட்டு வாசலில்தான் விளையாடிக் கொண்டிருந்தார் எனவும் கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா அவள காணோம். எல்லா இடத்துலயும் தேடிட்டோம் எங்க தேடியும் அவள காணோம் என்று அண்ணி கூற, நான் இப்போதே வீட்டுக்கு வரேன். பதற்றப்படாதீங்க என்று கூறுகிறாள். எழிலின் அம்மாவிடம் சென்று தான் வீடு வரைப் போயிட்டு வந்துடுறேன் என்று கூறிவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்புகிறாள். எழில் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்.

அங்கே கயல் பெரியப்பா வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பெரியப்பாவும், பெரியம்மா வடிவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டு அனுவை கடத்தி வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கிறார்கள். மூர்த்திக்கு கால் செய்து என்ன நடக்கிறது என்று கேட்கலாம் என திட்டமிடுகிறார்கள்.

மூர்த்திக்கு கால் செய்து அவனிடம் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்று கேட்க அவனோ அழுகிறான். இதனைப் பார்த்து இருவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்கும் போயிருக்கமாட்டா என்று கூறி நடிக்கிறார்கள். பின் வடிவு தனக்கு இந்த வெயிலிலும் குளு குளுவென்று இருப்பதாக கூறுகிறாள். அங்கே வில்லன்களிடம் பெரியப்பா கால் செய்து மகள் கல்யாணம் முடியுற வரைக்கும் குழந்தையைக் கண்ணும் கருத்துமா பாத்துக்கோங்க வேற யார் கண்ணுலயும் மாட்டிறக் கூடாது. குழந்தை உசுரோட இருக்கணும் என்று கூறி போனை வைக்கிறார்.

மண்டபத்திலிருந்து கிளம்பி கயல் வீட்டுக்கு வருகிறாள். மூர்த்தி ஒரு பக்கமும், அவன் தம்பி இன்னொரு பக்கமும் குழந்தையைத் தேடி அலைகிறார்கள். முடிவில் எங்கேயும் தேடி கிடைக்கவில்லை என்பதால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் தர்மலிங்கம் வீட்டில் அவர் மகள் கல்யாணத்துக்கு பந்தக் கால் நடும் விழா நடைபெறுகிறது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய இந்த விழா பந்தக்கால் சரிந்து விழுந்ததால் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 19th May 2023

கயலுடன் சேர்ந்து தனது திருமணத்துக்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று உறவினர்கள், நண்பர்கள் என அழைப்பிதழ் கொடுக்கிறான் எழில். அப்படி மருத்துவமனையில் கயலுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பத்திரிகை வைக்க செல்லும்போது கயலின் எதிரி டாக்டரைப் பார்க்கிறான் எழில். கயல் வேண்டாம் என்று சொல்லியும் அவனுக்கு பத்திரிகை வைக்கிறான். அவனிடம் சீண்டி சில விசயங்களையும் பேசுகி்றான்.

கடுப்பான டாக்டர் எழிலின் அம்மாவுக்கு கால் செய்து பேசுகிறான். அவன் அம்மாவிடம் இந்த கல்யாணம் எழிலுக்கும் கயலுக்குமா ரெண்டு பேரும் ஒன்னா ஜோடி போட்டு செல்கிறார்களே என கொக்கரிக்க, எழிலின் அம்மாவோ தனது திட்டத்தைக் கூறுகிறாள்.

இருந்தாலும் டாக்டர் சொல்லியது மனதைப் போட்டு உலுப்பிக் கொண்டிருக்கிறது. தனது நெருங்கிய தோழி ஒருவர் மூலம் கயலிடம் சில கேள்விகள் கேட்டு சோதனை செய்கிறாள். அக்கா கேட்கும் கேள்விகளுக்கு கயல் தெளிவாக பதிலளிக்கவே, அவளுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்து கயல் நல்லவள் என்று பேசுகிறாள் அந்த அக்கா. இதனால் எழிலின் அம்மாவுக்கு மகிழ்ச்சி.

இந்நிலையில் கேட்டரிங் வேலையில் சில சிக்கல்களை உருவாக்கி விடுகிறான் மூர்த்தியின் பெரியப்பா. இதனால் மூர்த்தி சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்கிறது. மூர்த்தி தனது தங்கை கயலும் எழிலும் சேர்வார்கள் என எதிர்பார்த்து அதில் ஏமாற்றமே மிஞ்சியதால் இந்த கேட்டரிங் வேலையை செய்ய யோசனையாக இருக்கிறது என்று கூறுகிறான்.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 23rd May 2023

எழிலுடன் தன் பெரியப்பா மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முழு மூச்சில் வேலை செய்து வருகிறாள் கயல். ஆனால் எழிலோ கயலை காதலித்து வருகிறான். இது கயலுக்கு தெரிந்தாலும் அவனது அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள் திருமணத்தை செய்ய முயற்சிக்கிறாள் கயல்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!