Kayal ஒரே நேரத்தில் தலைக்கு மேல் 3 பிரச்னைகள்! என்னடா இது கயலுக்கு வந்த சோதனை!

Kayal ஒரே நேரத்தில் தலைக்கு மேல் 3 பிரச்னைகள்! என்னடா இது கயலுக்கு வந்த சோதனை!
X
கயலுக்கு தன் தம்பி, தங்கைகளால் ஏற்பட்ட தலைக்கு மேல் ஆடும் கத்தி போன்ற பிரச்னைகளிலிருந்து அவள் எப்படி வெளியே வருகிறாள் என்பதே இன்றைய எபிசோட்

கயல் சீரியல் இன்று | Kayal serial Today Episode 30th August 2023

கயலுக்கு சோதனை மேல் சோதனைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஏற்கனவே அவளது தங்கை ஆனந்தி செய்த கொலையை மறைக்க அவள் படாதபாடு பட்டு வரும் நிலையில், அவளது தம்பியையும் இப்போது கடத்திவிட்டார்கள். கடத்தியவர்கள் பயங்கரமான ஆள்கள் என்பதால் போலீஸ் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற சூழ்நிலையில், தன் தங்கை செய்த கொலையை போலீசிடம் சொல்லாமல் எப்படி காப்பாத்துவது என்கிற இக்கட்டான சூழ்நிலையும் சேர்ந்தே கயலை படாத பாடு படுத்துகிறது.

கயல் சீரியல் இன்று | Kayal serial Today Episode 29th August 2023

எதிர்பாராத நிலையில் தன்னிடம் தவறாக நடந்த பிரபுவைத் தள்ளிவிட கொலைப் பழிக்கு ஆளாகிறாள் ஆனந்தி. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். கயல் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் ஆனந்தி அந்த விசயத்தை விட்டு வெளியே வரவில்லை.

மூர்த்தியின் மகள் அனு, அத்தை ஆனந்தியிடம் பாடத்தில் சந்தேகம் ஒன்றைக் கேட்க அவள் கோபத்தில் குழந்தையை கத்தி விடுகிறாள். இதனால் வீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. கயல் மீண்டும் ஆனந்தியை தனியே அழைத்துச் சென்று அறிவுரை கூறுகிறாள்.

அந்த நேரத்தில் காவல்துறையினர் கயல் வீட்டுக்கு வந்து சேர்கின்றனர். அவர்கள் தன் கையில் ஒரு செயினைக் கொண்டு வருகின்றனர். அந்த செயின் ஆனந்தியுடையது. இதனால் காவல்துறை அதிகாரி கொடுத்ததும் மகிழ்ச்சியுடன் இது ஆனந்தியுடையது என வாங்கிக் கொள்ள அந்த நேரத்தில் டிவிஸ்ட் ஆகிறது.

காவல்துறை அதிகாரி ஆனந்தியிடம் பிரபு குறித்து கேட்கிறார். இதனால் வீடே அதிர்கிறது. பிரபுவுக்கும் ஆனந்திக்கும் என்ன சம்பந்தம் என குழப்பம் ஏற்படுகிறது. ஆனந்திதான் பிரபுவை கொலை செய்ததாக கூற, மற்றவர்கள் குழம்புகின்றனர். கயலும் ஆனந்தியும் மிரள்கின்றனர். அவர்களது வீட்டில் குழப்பத்துக்கு காரணமாக இந்த செயல் அமைகிறது.

காவல்துறை அதிகாரி ஆனந்தியை மிரட்ட ஆரம்பிக்கிறார். இதனால் கயல் கேட்க ஆள் இல்லைனு காலையிலேயே வந்து மிரட்டி பாக்குறீங்களா என்று சொல்கிறாள். கயலுக்கும் இதில் கூட்டு இருப்பதாக போலீஸ் சொல்கிறது. அடிச்சி இழுத்துக் கொண்டு போக இருப்பதாக போலீஸ் கூற குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இப்படி ஆன பிறகு ஆனந்தி நடந்ததை அப்படியே கூற ஆரம்பிக்கிறாள்.

ஆனால் அந்த கதையை கூற காவல்துறை தயாராக இல்லை. பெண் போலீஸ் வந்து ஆனந்தியை இழுத்துச் செல்கின்றனர். கயல் எவ்வளவோ பேசியும் ஆனந்தியை இழுத்துச் செல்கிறது. கயலையும் சேர்த்தே ஜீப்பில் ஏற்றுகின்றனர். அந்த தெருவில் எல்லாரும் இவர்களைப் பற்றி தப்பு தப்பாக பேசுகின்றனர்.

அப்போது கயலின் அம்மா அழுதுகொண்டே ரோட்டில் ஓடும்போது கார் மேலே ஏறிவிடுவதாக கனவு காண்கிறார் கயல். அத்தனையும் கனவு. இந்த மாதிரி நிறைய காட்சிகள் கனவாக வருவதாக சன் தொலைக்காட்சியின் எல்லா சீரியல்களிலும் இதுபோன்ற காட்சிகளை வைத்திருக்கின்றனர். பார்க்க போரிங்காக இருக்கிறது.

உண்மையில் காலையில் அம்மா காபி போட்டுக் கொண்டு வந்து கயலை எழுப்புகிறார். கதவு திறந்து இருப்பதை பார்த்து உள்ளே கயல் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு தேட ஆரம்பிக்கிறாள்.

காலையில் கயலைக் காணவில்லை என அம்மாவும் அண்ணியும் குழம்ப, அப்போது அங்கே மூர்த்தி வருகிறான். அவனுக்கும் எதுவும் தெரியவில்லை. இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர்.

கயல் சீரியல் நேற்று | Kayal serial Yesterday Episode 28th August 2023

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கயல். கடின உழைப்பாளியான கயல், தனது குடும்பத்திற்காக போராடும் கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் உருவாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பிரபு தன்னிடம் தப்பாக நடக்க, அவனைக் கொலை செய்துவிட்ட ஆனந்தி, அதனை கயலிடம் சொல்லி அழுகிறாள். இதனால் அக்காள், தங்கை இருவரும் சேர்ந்து இந்த கொலையை மறைத்து, பிரபுவின் உடலை புதைத்து விட எண்ணுகிறாள் கயல்.

கயலும், ஆனந்தியும் சேர்ந்து அந்த பிணத்தை தனது அண்ணன் மூர்த்தியின் சமையல் பாத்திரத்தில் ஒளித்து வைக்க, அதனை எடுத்துச் செல்கிறான் மூர்த்தியும் அவனது நண்பனும். பிணத்தை மற்ற பாத்திரங்களுடன் சேர்த்து ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். அந்த நேரத்தில் கயல் ஒரு திட்டமிட்டு இரவு அனைவரும் தூங்கிய பிறகு ஆனந்தியுடன் சேர்ந்து கயலும் பிணத்தை எடுத்துச் சென்று புதைத்து விடுகின்றனர்.

ஆனால் திரும்பி வருகையில் அவர்கள் இருவரும் குடும்பத்தினரிடம் மாட்டிக் கொள்கின்றனர். கயலும், ஆனந்தியும் வீட்டுக்கு வர அங்கு மூர்த்தி, அண்ணி, அம்மா என அனைவரும் காத்திருக்கின்றனர். என்ன செய்வது என்று சொல்லத் தெரியாமல் குழம்பிய ஆனந்தி சொதப்ப, கயல் சமாளிக்கிறாள். ஆனந்தியின் செயினைக் காணவில்லை என்று சொல்ல அவர்கள் கொஞ்சம் திட்டிவிட்டு சமாளித்து விடுகின்றனர்.

பிரபுவைக் காணவில்லை என அவனது பெற்றோர் புகார் செய்ய, அதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் செயினை ஒருவேளை பிணத்துடன் புதைத்து விட்டோமோ அதன் அருகில் தொலைந்து விட்டதோ என நினைத்த கயல் அதைத் தேடிச் செல்கிறாள்.

செல்லும் வழியில் போலீசிடம் மாட்ட, அவள் ஏதேதோ சொல்லி தப்பிக்க நினைக்கிறாள். அங்கு ஒரு நோயாளியைப் பார்க்கச் செல்வதாக கூறி செல்கிறாள். ஆனால் காவலர்களுக்கு சந்தேகம் வர உடனடியாக கயலைத் துறத்திக் கொண்டு செல்கின்றனர்.

தப்பித்த கயல் அங்கே ஒரு இடத்தில் மறைந்து நிற்கிறாள்.

கயல் சீரியல் நாளை | Kayal serial Today Episode

தொலைக்காட்சியிலும் சன் நெக்ஸ்ட் ஆப்பிலும் வெளியான பிறகு கயல் சீரியல் இன்றைய எபிசோட் முழு எபிசோடும் Ethirneechal serial today episode youtube full episode யூடியூபில் வெளியிடப்படும். அதற்கு முன்பாக நமது தளத்தில் அந்த எபிசோட் குறித்த ரிவியூ படித்ததற்கு நன்றி.

Tags

Next Story