எழில் தீபிகா காதல் கதை! பெரியப்பாவால் கயல் குடும்பத்தில் ஏற்படும் குழப்பம்..!

எழில் தீபிகா காதல் கதை! பெரியப்பாவால் கயல் குடும்பத்தில் ஏற்படும் குழப்பம்..!
X
கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். https://t.me/suntvserialwrittenupdate வாட்ஸ்அப்பில் இணைய

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

என்னால அது முடியாது. எழிலுக்கு என்னால எந்த பிரச்னையும் வரக்கூடாது. எழில் உன்ன விட்டு போகமாட்டாரு. அவரு அவங்க அம்மா பேச்சையே கேக்காம, உன்ன விடாம இருந்தாரு. அந்த அளவுக்கு போன அவரு, உன்ன அவ்ளோ சீக்கரம் விட்டுக் கொடுக்க மாட்டாரு என கீதா கயலை உசுப்பேத்திக்கொண்டிருக்கிறாள்.

கௌதம் கிட்ட என்ன சொன்னியோ அது நிச்சயமா நடக்கும் என்று சொல்ல கயல் அது காதில் வாங்காதவாறு சென்று கொண்டிருக்கிறாள். இன்னும் எவ்வளவு நாளைக்குதான் நீ இப்படி இருக்கப்போறயோ நான் பாக்கத்தான போறேன்.

கௌதம் கயல் அடித்த அடி தாங்காமல் வருத்தத்தில் இருக்கிறான். ஆனால் நர்ஸ் வந்து கேட்கும்போது கௌதம் தான் கயலை அடித்ததாக சொல்ல, அதை நம்பாத நர்ஸ், கயல்தானே உங்களை அடித்தார் என்று மொத்த நர்ஸும் பாத்துட்டாங்க என்று சொல்ல, அவனை இவள் உசுப்பேத்திக்கொண்டிருக்கிறாள். உங்களை டம்மி பீசாக ஆக்கிட்டாளே என்று சொல்ல, அவன் கடுப்பாகி கழுத்தை நெரிக்கிறான். அவள் தன்னை விடுங்க என்று சொல்ல, தான் உசுப்பேத்தவில்லை அவளுக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுக்கப்போறீங்க என்று கேட்பதாக கூறுகிறாள்.

கௌதம் தன் வன்மத்தை கொட்டி கயலை பழிவாங்கும் திட்டத்தை சொல்கிறான் கௌதம்.

குரங்கு பொம்மை என தன் முகத்தை காட்டி கேட்க, கயலின் பெரியம்மாவை அது கண்ணாடி என அசிங்கப்படுத்துகிறார் பெரியப்பா. தனக்கு வேண்டியதை கேட்டு கேட்டு தொல்லை கொடுக்கிறாள் பெரியம்மா. அந்த கடைக்கு, எழிலைக் கூட்டிக் கொண்டு தீபிகா வருகிறாள். அங்கு பேக்ரவுண்ட் ஃபோட்டோ ஷூட்டுக்கு நடத்த அலங்கார பொருட்கள் வாங்க வருகிறார்கள்.

பெரியப்பாவும் பெரியம்மாவும் பர்ச்சேஸ் செய்துகொண்டிருக்கையில், அங்கே தீபிகாவும் எழிலும் சேர்ந்து வருவதை பார்த்துவிடுகிறாள். அதேநேரம் எழில் தன்னை அலைக்கழிக்காதீர்கள் என எரிச்சலடைகிறான். நேரம் போதாது நீங்கள் கயலை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு கடை கடையா ஏறி இறங்கி ஷாப்பிங் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல, தீபிகா தனது காதலை எழிலிடம் தெரிவிக்கிறார். அதை சரியாக பெரியம்மா பார்த்துவிட்டு, தனது சூழ்ச்சியை செய்ய ஆரம்பிக்கிறார். வாயில் அடித்துக்கொண்டு அய்யய்யோ என்ன கண்றாவி கருமம் கருமம் என தலையில் அடித்துக் கொள்கிறாள்.

தன் கணவனுக்கும் அதை காண்பித்து கொடுக்க, பெரியப்பாவும் கோபப்படுகிறார். கயலை விட்டுட்டு இவ கூடவே சுத்திட்டு இருக்கானே என எழிலை கறித்து கொட்டுகிறாள். எழில் ஏமாற்றுக்காரன் அது இது என்று பேச, எழிலோ அங்கே தீபிகாவை திட்ட ஆரம்பிக்கிறான். நான் சென்ஸ் மாதிரி எனக்கு பிரபோஸ் பண்றீங்க. நான்தான் கயலை லவ் பண்றேன்ல. இப்படி பண்ணிட்டு இருக்கீங்க. நான் ஒன்னும் முட்டாள் இல்லை. வேணாம் தீபிகா உன்கிட்ட ஆர்கியூ பண்ண நேரம் இல்லை.

இங்கே கயலின் பெரியம்மாவும் பெரியப்பாவும் எழிலைப் பற்றி தப்பாக பேசிக்கொண்டு அதை கயலின் அம்மா காமாட்சி, அன்பு, மூர்த்தியிடம் சொல்லலாம் என திட்டம் போடுகிறாள் கயலின் பெரியம்மா.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

அப்படி நிறுத்துனா என்ன ஆகும். கல்யாணம் மட்டும் நடந்துட்டா மூர்த்தி எழுதிக்கொடுத்த அக்ரிமெண்ட் செல்லாம போயிடும்னு சொல்ல, சரி வா நாம போயி விசயத்த மூர்த்திக்கிட்ட சொல்வோம் என கிளம்புகிறார்கள்.

மூர்த்தி வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்து சேர்கிறார்கள். மூர்த்தியை தனியே அழைத்து, மாப்பிள்ளைக்கும் கயலுக்கும் ஏதாவது பிரச்னையா என்று கேட்கிறார்கள். ஆனால் எழில் வேறு ஒருத்தியைக் காதலிப்பதாக பெரியம்மா சொல்கிறாள். கண்ணால் பார்த்ததாக கூறி எழில் வேற ஒருத்தி கூட சுத்திக்கொண்டிருப்பதாக பெரியப்பா சொல்ல, மூர்த்தி மறுத்துக்கொண்டே இருக்கிறான்.

கிப்ட் ஷாப்பில் ஒரு பெண்ணும் எழிலும் ஜோடியாக கடைக்குள் நுழைந்து, பின் ஜோடியாக காரில் சென்றார்கள் என்று சொல்ல, மூர்த்தி அதிர்ச்சியடைகிறான். இந்த பிரச்னைய சரியா ஹேண்டில் பண்ணு. கயல் வாழ்க்கை கேள்விக்குறியா ஆகிடாம பாத்துக்கோ என சொல்கிறார் பெரியப்பா. எழிலை தனியா கூப்பிட்டு பேசு, வேற பொண்ணுங்க கூட சுத்தாதீங்கன்னு எடுத்து சொல்லு என்று பெரியப்பா சொல்ல, பெரியம்மா தன் பங்குக்கு எழிலை சரியான பொறுக்கி என்று திட்ட, அந்த நேரம் பார்த்து கயல் வந்து நிற்கிறாள்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

கயல் வந்து என்ன சொன்னீங்க என்று கேட்க, அதிர்ச்சியில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அப்படியே நிற்கிறார்கள். கயல் எழிலைப் பற்றி பொறுக்கி என்று சொன்ன பெரியம்மாவை லெப்ட் ரைட் வாங்குகிறாள். எழிலைத் தப்பா பேசாதீங்கன்னு ஆரம்பத்திலேயே மூர்த்தி அதட்டுறான். எழிலும் இன்னொரு பெண்ணும் கிப்ட் ஷாப்ல இருந்தாங்க அததான சொல்றீங்க. எழில் இன்னொரு பெண் கூட பெட்ரூம்ல இருந்தாலும் நான் நம்ப மாட்டேன்.

எழில எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். அவனால எந்த பெண்ணுக்கும் எந்த ஒரு சின்ன விசயம் கூட நடந்தது இல்ல. எங்கப்பாவுக்கு அப்றம் ரொம்ப நல்லவன்னு நான் நினைக்குற ஆளு என் எழிலு. ஒரு பொண்ணோட வாழ்க்கை பாலாகிடக்கூடாதுங்குற நல்லெண்ணம் நல்லெண்ணைனு எழில பத்தி தப்பு தப்பா பேசக்கூடாதுனு சொல்கிறாள் கயல்.

அந்த நேரம் பார்த்து கயலின் அம்மா காமாட்சி வந்து நிற்கிறாள், எழிலைப் பற்றி தப்பாக பேசும் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் போட்டுக்கொடுக்கிறாள். தனக்கு மாலையில் ப்ரீவெட்டிங் ஃபோட்டோஷூட், அதனால் கூட அவர்கள் அங்கு வந்திருக்கலாம் என்று சொல்லிவிட்டு எனக்கும் எழிலுக்கும் கல்யாணம் நடக்குதோ இல்லையோ..

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial today update

கயலிடம் தான் கொண்டு வந்த காஸ்ட்யூம கொடுத்து, இத போட்டுக்கிட்டா கலக்கலா இருக்கும் என்கிறான் எழில். தீபிகா எழிலுக்கும் அவர கல்யாணம் பண்ணிக்க போறவருக்கும் போட்டோஷூட் என்கிறாள். ஆனா எழில் கயல் பேரைச் சொல்லு என்று சொல்கிறான். கயலுக்கும் எழிலுக்கும் கல்யாணம் என்று சொல்ல, கயலின் தோழி கீதா இவரையா மிஸ் பண்ண போற என்று கூறுகிறாள்.

எழில் கயலை நிச்சயமாக ஃபோட்டோஷூட்டுக்கு வர அழைக்கிறான். ஆனால் தீபிகாவோ கயலிடம் மீண்டும் மீண்டும் தான்தான் எழிலின் பொண்டாட்டி என்று அழுத்தமாக சொல்லிவிட்டு செல்கிறாள். கீதாவும் நீதான் பொண்ணு என கயலிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு செல்கிறாள். என்ன செய்வது என்று அறியாமல் அமைதியாக தனது இருக்கைக்கு செல்கிறாள்.

தன் இருக்கையில் அமர்ந்துகொண்டே எழில் தன்னிடம் பேசியதையும், தீபிகா பேசியதையும் நினைத்து க்கொண்டே இருக்கிறாள். அந்த நேரம் கௌதமைத் தேடி ஒரு நர்ஸ் வருகிறாள். அவள் எழிலும் கயலும் சந்தித்துக்கொண்டதைப் பற்றி பேசியதை போட்டு கொடுக்கிறாள். கயல் மீது இருக்கும் பொறாமையை கௌதமிடம் பொங்குகிறாள். இதனால் கௌதம் கயலை எப்படியாவது தடுத்து நிறுத்தலாம் என்று யோசிக்கிறான். விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு நகர்கிறான்.

இங்கே கயல் மனதில் பெரிய அலையோட்டத்தில் செய்வதறியாக திகைத்து நிற்கிறாள். அவளுக்கு மிகப்பெரிய சோகம் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எழிலை பிரியமாட்டேன் என அவனுக்கு செய்து கொடுத்த சத்தியமா, கல்யாணம் செய்தால் எழில் செத்துவிடுவானே என்கிற ஜாதகமா என சிந்தித்துக்கொண்டே அழ ஆரம்பிக்கிறாள். நிச்சயதார்த்த நிகழ்வுகளை மனதில் ஓட்டி பார்க்கிறாள் கயல். மோதிரம் மாற்றியது என அனைத்தும் வந்து போக அந்த நேரத்தில் நந்தி மாதிரி வந்து நிற்கிறான் கௌதம்.

கயல் அழுவதை பார்த்து ரசிக்கிறான் கௌதம். அவள் ஏன் அழுகிறாள் என்று அவளிடமே கேட்க அருகில் செல்கிறான் கௌதம். என்ன கயல் மேடம் அழுதுக்கிட்டு இருக்கியா. கயலா இது என் கண்ணையே நம்ப முடில. என்னாச்சுமா அடுத்தவங்க கண்ணீர தொடைக்குற நீயே இப்பிடி அழலாமா அதுவும் உன் மேல ஆச வச்சிருக்கிற நா இருக்கும்போது.

கயலை வெறுப்பேற்றிக்கொண்டே என்ன ஆச்சு என கேட்க, ஏன் அழுகிறாய் ஏதோ தப்பா இருக்கு என்று சொல்லி கேலி செய்கிறான். இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என கயலிடம் போட்டு வாங்குகிறான். கயலுக்கும் எழிலுக்கும் இடையில் ஏதோ பிரச்னை என்ன விசயம் என ஓயாமல் துருத்தி துருத்தி கேட்கிறான். எழில் உன்னை கழட்டி விட பார்க்கிறானா? உனக்கும் பாய் பிரண்டுக்கு உன் தங்கச்சி தேவி மாதிரியே குழந்தை குடுத்துட்டு என சொல்ல ஆரம்பிக்க கயல் கோபப்படுகிறாள்.

என் ஹாஸ்பிடல்ல எனக்கு கீழ வேலை செய்யுற நர்ஸுக்கு என்ன பிரச்னைனு தெரிஞ்சிக்க வேண்டுமே என மீண்டும் ஆரம்பிக்கிறான். குடும்ப கஷ்டமா என மீண்டும் கேட்க, உனக்கும் எழிலுக்கும் பிரச்னையா என சொல்லி, கயலின் கோபத்தை தூண்டுகிறான்.

டூட்டி டைம்ல வேலை செய்யாம அழுதுட்டு இருக்க என்னனு கேட்க எனக்கு உரிமை இருக்கு என்னனு சொல்லு, என்று கேட்கிறான். எழிலுக்கும் உனக்கும் இடையில தீர்க்க முடியாத ஒரு பிரச்னை போயிட்டு இருக்கு. நீயும் எழிலும் வாழ்க்கைல ஒன்னு சேரவே முடியாது அத நினச்சுதான அழுதுட்டு இருக்க. உன் வாழ்க்கையில என்னென்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும். நிச்சயம் வேணா அவனுக்கு உன்கூட நடந்திருக்கலாம். ஆனா கல்யாணம் அவனுக்கு வேற ஒருத்தி கூடதான் நடக்கும் என்கிறான். எழில் உன் கழுத்துல தாலி கட்டமாட்டான். இந்த ஜென்மத்துல உன்ன அவன் கல்யாணம் பண்ணிக்கமாட்டான்.

கயல் மீது அவனுக்கு வன்மம் இருக்கிறது என்பதை சொல்லியே கடுப்பேத்துகிறான். எழிலையும் கயலையும் பெரிதாக தாக்கி பேசுகிறான். இதனால் கயல் ஒரு கட்டத்தில் வெடித்து சிதற ஆரம்பிப்பாள் என்பது தெரிகிறது.

எழிலும் நீயும் ஒன்னா சேர முடியாது என அழுத்தமாக சொல்ல, அதற்கு கயல், அதிரடி சரவெடியாய் எழுகிறாள். கௌதமுக்கு பளார் என்று ஒன்று கன்னத்தில் விழுகிறது.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

பளார் என்று ஒன்று கன்னத்தில் போட்டு வீரவசனம் பேச ஆரம்பிக்கிறாள் கயல். இந்த அடி போதுமா. நீ என்ன கடவுளா நானும் எழிலும் சேரமாட்டேன் சொல்ல நீ யாருடா. உன் அதிகாரம்லாம் ஹாஸ்பிட்டலோட இருக்கட்டும். என்ன நடந்தாலும் நானும் எழிலும் ஒன்னு சேர்றத எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்த ஜென்மத்துல எழில்தான் என்னோட புருசன். ஊரறிய நான்தான் அவன் கைய புடிக்க போறேன். இது கடவுளே முடிவு பண்ணது. நாங்களே பிரியணும்னு நினச்சாலும் அந்த கடவுளே எங்கள சேத்து வைப்பான்.

இதுவே கடைசியாக இருக்கட்டும் இனி உன் லிமிட்ட கிராஸ் பண்ணி என்ன பத்தியோ எழில பத்தியோ பேசுன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அப்போது கீதா உடனே ஓடி வந்து சூப்பர் சூப்பர் சூப்பர் னு சொல்லி பாராட்டுகிறாள். ஜாதகத்த வச்சி நீ எழில பிரிய முடியாது. ஜாதகத்த விட காதல் பெருசு. இந்த ஜென்மத்துல எழில்தான் உன் புருசன். மனச கள்ளாக்கிட்டு என்கிட்ட பொய் சொன்னாலும் உன் மனசால அத பண்ண முடியாது.

உனக்கே தெரியும் என்ன நடந்தாலும் நீயும் எழிலும் பிரிய மாட்டீங்க.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

கயல் இதை நினைத்து பார்க்கிறாள். கீதா மீண்டும் அறிவுரையை ஆரம்பிக்கிறாள். நீயும் எழிலும் சேர்றது நீங்க முடிவு பண்றது இல்ல. அது கடவுள் போட்ட முடிச்சு. எழில் மேல நீ வச்சிருக்க அன்பும் காதலும் தன்னால வெளிய வந்துடும். எழிலும் நீயும் சேரமாட்டீங்கன்னு சொன்னா உனக்கு கோபம் வருது.

தீபிகாவோ பொடலங்காவோ யாரு வந்தாலும் உங்க காதல் அந்த ஜாதகத்த துரத்திட்டு அதுதான் ஜெயிக்கும். உன் மனசுக்குள்ள எழில விட்டுக்குடுக்கக்கூடாதுனு போராடுது. அதனால அது பொத்துக்கிட்டு வெளியே வருது. கல்யாணம் பண்ணா எழிலுக்கு ஏதாவது ஆகிடும்னு மனசு சொல்றத கேட்காத, உன் புத்தி என்ன சொல்லுதோ அத கேளு. எதார்த்தத்த சொல்றேன். எழில் நல்லா இருக்கணும்னு நீ நினச்சா நீ எழில்கூட இருக்கணும். ஜாதகத்த தூக்கி எரிஞ்சிட்டு காதல நம்பு. எழில கல்யாணம் பண்ணலன்னா அவரு எப்படி நிம்மதியா இருப்பாரு. நீ இல்லாம அவரால எப்படி வாழ முடியும்.

ஆனா கயல் இதையெல்லாம் மறுத்துவிட்டு நான் எழிலை பிரிவது உறுதி என்கிறாள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!