திடீரென வந்த கால்...! அதிர்ச்சியில் எழில்..! கயலுக்கு என்னாச்சு?

திடீரென வந்த கால்...! அதிர்ச்சியில் எழில்..! கயலுக்கு என்னாச்சு?
X
கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். வாட்ஸ்அப்பில் இணைய

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

அவனுக்கு மனுசங்கள நேசிக்க மட்டும்தான் தெரியும். ஒரு பிரச்னைனா விலகி போற மனுசங்களுக்கு மத்தியில, ஒருத்தருக்கு ஒரு பிரச்னைனா அத நான் சரிபண்ணி வைக்குறேன்னு சொல்லி முன்னாடி வந்து நிப்பான். கலங்கி நிக்குற யாரையும் அவன் முன்னாடி நின்னு ஜெயிக்க வைப்பான்.

எழிலோட ஒத்த வார்த்தை என் மொத்த குடும்பத்தையும் தாங்கிப்பிடிக்க காரணமா இருந்துது. நா இப்படி தைரியமான பொண்ணா இருக்க காரணமே எழில்தான். எனக்கு அப்பா கிடையாது. என் அப்பாவோட உருவத்த எழில்கிட்ட நான் பாத்திருக்கேன். அப்பா எனக்கு திரும்ப கிடச்சிட்டதா நா நினச்சிருக்கேன்.

இப்படி பேசிக்கொண்டிருக்கையில், தீபிகா எழில் குறித்து உருகுகிறாள். இப்படி ஒரு ஜெண்டில்மேன நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும் என்கிறாள் தீபிகா.

எழிலுக்கு பிடிச்சவங்க பொய் சொன்னா அது அவனுக்கு பிடிக்காது. அவன் பயங்கரமா கோபப்படுவான்.

அப்படின்னா நான் எழில்கிட்ட எதையுமே மறைக்க மாட்டேன். எழில் வாழ்க்க நல்லா இருக்கணும்னா அவரோட மனைவிங்கற ஸ்தானத்துல நான் இருக்கணும். நீங்க எப்படி அவர பாக்க நினைக்குறீங்களோ அதவிட பெரிய அளவுல பாத்துப்பேன். இந்த உலகத்துல யாரும் அப்படி ஒரு காதல் செஞ்சிருக்கமாட்டாங்கங்குற அளவுக்கு அவர திகட்ட திகட்ட காதலிப்பேன் என தீபிகா பேசிக்கொண்டிருக்கிறாள்.

கயல் இதனை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறாள். அவளின் வெந்த புண்ணில் வேல் பாய்க்கும் வகையில் அவளையே பாராட்டச் சொல்கிறாள் தீபிகா.

இந்த நேரத்தில் எழிலும் அவனது அப்பாவும் ஜீப்பில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவரும் ஜாலியாக கலாய்த்துக்கொண்டே வருகிறார்கள். எழிலின் அப்பா தான் இன்னமும் இளமையாக இருப்பதாக பேசுகிறார்.

இந்த பக்கம் ஹோட்டலில் தீபிகா எனக்கு மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கிறார். கயல் அவரிடம் எழிலுக்கு மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவிக்கிறாள். அதன்பிறகு எழிலுக்கு பாக்ஸிங் மிகவும் பிடிக்கும் என்கிறார்.

எழிலின் ஜீப், கயலும் தீபிகாவும் இருக்கும் அதே ஹோட்டலுக்கு அருகே வருகிறது. அப்போது எழில் அதனை பார்த்துவிடுகிறான். உடனே கோபப்பட்டு, அங்கு கீழே இறங்கி, ஹோட்டலுக்குள் செல்கிறான். எழிலை கயல் பார்த்துவிடுகிறாள் ஆனால் எழில் கயலைப் பார்க்கவில்லை.

தீபிகாவுடன் நம்மை பார்த்தால் என்ன ஏன் அவாய்டு பண்ற என எழில் ஃபீல் பண்ணுவானே என கயல் நினைக்கிறாள். உடனடியாக தீபிகாவிடம் பொய் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் செல்ல இருக்கிறாள். அந்த நேரத்தில் எழில் கயலைப் பார்த்துவிட்டு கயல் என்று அழைக்கிறான்.

அருகிலே தீபிகா நிற்கும் போது அவரை அறிமுகப்படுத்தாமலே இருக்கிறாள் கயல். இதனை நினைவுபடுத்த தீபிகா முயற்சிக்கிறாள். உடனே எழிலும் அவள் யார் என்று கேட்க, மேரேஜ் ஆர்கனைசேசர் என்று கூறுகிறாள் கயல்.

எழில் கயலைப் பற்றி பெருமையாக பேச, தீபிகாவுக்கு எரிகிறது. கயல் எப்படியோ தீபிகாவை பற்றி பெரியதாக பேச நினைக்க, எழில் ஏதோ கேட்க தீபிகா மாட்டிக்கொண்டு முழிக்கிறாள்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

அங்க ஷங்கர்னு ஒரு மேனேஜர் இருக்காரு அவரு எனக்கு நல்லா பழக்கம். என் ஆஃபீஸ்ல நடக்குற எல்லா ஈவென்ட்ஸ்க்கும் அவரதான் மேனேஜர். இருவரும் மாறி மாறி ஈவெண்ட் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தீபிகா, பொடி வைத்து தன் வாழ்க்கையில் எழில் குறித்து பேசிக்கொண்டிருக்கிறாள். அது எழிலுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள் தீபிகா. கடைசியில் தீபிகாவை தனக்கு பிடித்திருப்பதாக எழில் சொல்லுகிறாள். இதனால் கயலின் மனம் குறுகுறுக்கிறது. கயலிடமே பெண் இருக்கா என்று கேட்டு, அவளுக்கு செக் சைன் போட்டு கொடுக்கிறான் எழில்.

கல்யாணம் மட்டுமின்றி வளைகாப்பு, முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள்தான் ஈவென்ட் மேனேஜர் என்கிறான் எழில்.

அந்த நேரத்தில் எழிலுக்கு தன் அப்பாவை காரில் விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. இதனால் எழில் வேகமாக எழுந்து செல்லுகையில், பேரர் வந்து எழில் மீது சாப்பாட்டை கொட்டிவிடுகிறார். தவறுதலாக நடந்த இந்த விபத்தை எழில்கூட விட்டுவிட்டார். ஆனால் தீபிகா அதனை பெரிதாக்க முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் எழிலின் மீது கொட்டியதை துடைக்க கயல், தனது பையில் டிஸ்யூ தேடுகிறாள். அதற்குள் தீபிகா விரைந்து சென்று தனது கைக்குட்டையை எடுத்து எழிலை துடைக்க, கயல் அதிர்ச்சியடைகிறாள்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

துடைக்கும் சாக்கில் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறாள் தீபிகா. வெட்கத்தில் எழில் நெளிய, கயல் ஆதங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ரொம்ப தேங்க்ஸ் கயல், உன்னாலதான் எனக்கு எழில் கூட அறிமுகம் கிடைச்சிது.

எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லென்த் செட் ஆகிடிச்சு. என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு. நான் கிளம்புறேன் கயல், என்ன பத்தி பாசிடிவ்வா அவருகிட்ட எடுத்துச் சொல்லுங்க என்று கூறுகிறாள் தீபிகா.

ஹாஸ்பிட்டல்ல ஒரு முக்கியமான வேலைனு சொன்னேன்ல, நான் கிளம்பி போறப்பதான் இடையில இந்த ஈவென்ட் மேனேஜர மீட் பண்ண வந்தேன்.

அந்த நேரத்தில் ஆனந்தி, எழிலுக்கு அழைக்கிறாள். கயலுக்கு அடிபட்டு நல்லா ரத்தம் போயிட்டு இருக்கு. ஹாஸ்பிட்டல் கூப்பிட்டால் வரமாட்டுறாங்க. நீங்க வந்து சொல்லுங்க அப்பதான் கேப்பாங்க என்று ஃபோனை வைத்துவிடுகிறாள். எழில் ஷாக்கில் இருக்கிறான்.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode

அம்மா : அன்பு ஷாலினிய நீ ஏறெடுத்து கூட பாக்கமாட்டேனு அம்மா மேல சத்தியம் பண்ணுப்பா. யோசிக்காம சத்தியம் பண்ணு அன்பு

மூர்த்தி : டேய் அன்பு சத்தியம் பண்ணுடா. தேவையில்லாத பேச்சல்லாம் கேக்க வேணாம்டா. பண்ணு சத்தியம்

அம்மா : நீ இப்ப பண்ணப்போறியா இல்லையா

அன்பு அம்மா மீது தலையில் கைவைத்து சத்தியம் செய்கிறான்.

இதோ பாருப்பா நீ இந்த சத்தியத்த மதிப்பீங்கன்னு நினைக்கிறேன். இத பெருசா எடுத்துக்காம சத்தியம் தான இந்த காலத்துல யாரு மதிக்குறான்னு நீ மீறுனனு வையி, நா உன்ன சும்மா விடமாட்டேன்

என்ன பண்ணுவீங்க.. அப்படி என்ன பண்ணிடுவீங்க

ஏன் விக்னேஷ் நீங்களும் தேவியும் காதலிச்சிதான கல்யாணம் பண்ணீங்க. உங்களுக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டை போட்டா என்ன பண்ணிருப்பீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், உங்க தங்கச்சிக்கு ஒரு நியாயமா? முதல்ல ஒருத்தர காதலிச்சிட்டு அவங்கள மனசுல வச்சிட்டு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிட்டு அவர் கூட வாழ்றது எப்படி ஒரு கஷ்டமான விசயம்.

நானும் எழிலும் காதலிக்குறோம். நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு. அதனால எல்லாம் முடிஞ்சிட்டதா அர்த்தம் இல்ல. எங்களுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் எதுவுமே உறுதியில்ல. என்னவேணா நடக்கலாம். கல்யாணம் நடக்கலனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. எதுவா இருந்தாலும் அத ஏத்துக்கிட்டு மனச தேத்திக்கிட்டு வாழ கத்துக்கணும்.

மேடம் அதான் என் தம்பி வாக்குறுதி கொடுத்துட்டான்ல. எது நடக்குமோ அது நடக்கும். என் தம்பிய அப்படி நட இப்படி நடனு சொல்றதுக்கு நீங்க ஒன்னும் கடவுள் இல்ல. என்ன வேணா நடக்கலாம் நீங்க வீட்டுக்கு போங்க.

ஷாலினியும் விக்னேஷும் வேதவல்லியும் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார்கள்.

கயல் வீட்டில் அனைவருக்கும் மனம் சஞ்சலமாக இருக்கிறது. கயல் ஏன் இப்படி பேசினாள் என வருத்தப்படுகிறாள் அம்மா. அன்பு அழுகிறான். அவனிடம் சென்று கயல், உன் வலியை என்னால் புரிஞ்சிக்க முடியுது.இது சூழ்நிலை. நீ ஷாலினிய இவ்ளோ தூரம் காதலிக்கிறனு எனக்கு இன்னைக்குதான்டா புரிஞ்சிது. அக்கா நான் இருக்கேன்ல நீ ஆசப்பட்டத நா நிச்சயமா நிறைவேத்தி வைக்குறேன். அவள உன் கூட சேத்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.

அம்மா மேல சத்தியம் பண்ணிட்டோமே எப்படி சாத்தியம்னு யோசிக்கிறயா. அம்மாவே உன்கிட்ட வந்து ஷாலினிய கட்டிக்கோனு சொல்வாங்க. நீ நினச்சது எல்லாம் நினச்சபடி நடக்கணும்னா நீ உண்டு உன் டிரெய்னிங் உண்டுனு உன் வேலைய பாரு. நானே வேதவல்லி மேடம்கிட்ட பேசி உனக்கும் ஷாலினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறேன். எத நினச்சும் ஃபீல் பண்ணாத என்கிறாள் கயல்.

தீபிகா, கயலுக்கு ஃபோன் செய்து வெளியில் வரச் சொல்லி அழைக்கிறாள்.

தீபிகா - ஹலோ ஹாய் கயல் நான் தீபிகா பேசுறேன். உங்க ஃபிரண்டு எழில கட்டிக்கப்போற பொண்ணு. சிவசங்கரி ஆண்ட்டி கூட அறிமுகப்படுத்துனாங்களே.

இதோ பாருங்க நா உங்கள எதிரியா பாக்கல. பிரண்ட்டாதான் பாக்குறேன். அதனாலதான் என்ன பத்தி நீங்க முழுசா புரிஞ்சிக்கணும் என் கேரக்டர தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீங்க கண்டிப்பா பண்ணுவீங்கன்னு நினைக்குறேன்.

எழில் கிட்ட நா பேசணது இல்ல. அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்க விரும்புறேன். அதான் அவர பத்தி முழுசா தெரிஞ்சிக்க ஆசப்படுறேன். நீங்க நினச்சா அத செய்ய முடியும். நாம மீட் பண்ணலாமா கயல் என்று சொல்கிறார்.

அப்போது தங்கை ஆனந்தி வந்து எழில் மாமா உனக்கு கால் பண்ணிக்கொண்டு இருக்கிறார் அவரை அழைத்து பேசு என்கிறாள்.

தீபிகாவோ கயலிடம் உங்களுக்கு வர விருப்பம் இல்லைனா விடுங்க என்கிறாள். அதற்கு கயல் நான் வருகிறேன் என்று தெரிவிக்கிறாள். லொகேஷன் அனுப்புகிறேன் வாருங்கள் என்கிறார். அந்த நேரத்தில் எழிலுக்கு கால் செய்து பேசுகிறாள்.

யாரிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய் கயல் என்று எழில் கேட்கிறான். என்ன விசயம் ஏதாச்சும் முக்கியமான விசயமா பேசணுமா என்று கேட்கிறாள் கயல். எழில் தன்னை காஃபி ஷாப் ஒன்றுக்கு வரச் சொன்னாலும் நான் வரவில்லை என்று சொல்லி தட்டிக்கழிக்கிறாள். எழிலும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடைபெறுகிறான்.

எழில் தனது அப்பாவுடன் அந்த காஃபி ஷாப்புக்கு செல்கிறான்.

அடுத்ததாக கயல் அவளது தோழிக்கு கால் செய்து பேசுகிறாள். எழில் கால்ல ஒரு முள்ளு குத்துனா கூட என்னாத தாங்கிக்க முடியாது. அவன் நல்லா வாழணும் அதனாலதான் அவனுக்காக என் காதல தியாகம் பண்றேன். தீபிகா அவள நல்லா பாத்துப்பா என்று சொல்ல, அடுத்து கோபப்படுகிறாள் தோழி.

ஒரு கட்டத்துல எழில் உன்ன விட்டு விலகுறப்ப, உனக்கு எவ்ளோ வலி வந்துது. அந்த வலிய நீ உணர்ந்துமே அத எழிலுக்கு குடுக்க நினைக்குறியா போயி எழில்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லு என்கிறாள்.

எழில் நல்லா இருக்கணும் என் சந்தோஷத்துக்காக அவன நானே கொன்னுடக்கூடாது என்கிறாள் கயல்.

ரெஸ்ட்டாரெண்டில் தீபிகா கயலுக்காக காத்திருக்கிறாள்.

கயலுக்கும் சேர்த்து காஃபி ஆர்டர் செய்கிறாள் தீபிகா. எனக்கு எழில பத்தி எல்லாமே தெரிஞ்சிக்கணும்னு சொல்றா தீபிகா. அப்போது கயல் என் எழில் என்று ஆரம்பிக்கிறாள். அதற்கு தீபிகா அப்படி பேசாதீங்க எனக்கு ஹர்ட் ஆகுது என்பது போல சொல்லிவிட்டு நான்தான் எழில கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்று கூறுகிறாள்.

எழிலின் அருமை பெருமைகளைக் கூறுகிறாள் கயல். நல்லவன் வல்லவன், அவனுக்கு என்ன பிடிக்கும், அவனது குணம் என தொடங்கி பல விசயங்களை பகிர்ந்துகொள்கிறாள்.

என்ன இதுவரைக்கும் அவன் கண்கலங்க விட்டதில்ல, அவனோட தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் ஜெயிக்க வைக்கும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கு எழில் தனது ஜீப்பில் வருகிறான்.

கயலோட ஸ்கூட்டி இங்க நிக்கிது என பார்த்து எழில் தன் அப்பாவிடம் சொல்கிறான். ஆமா ஹாஸ்பிட்டல்ல ஏதோ முக்கியமான வேலைனு இங்க என்ன பண்றா. அப்பா நீங்க இருங்க நான் என்னனு பாத்துட்டு வந்துடுறேன் என்று உள்ளே செல்கிறான்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!