புதிய சாதனை படைத்த கயல்!

புதிய சாதனை படைத்த கயல்!
X
கயல் போன்ற சீரியலில் நடிப்பது தனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார் 500 எபிசோட்களை எட்டியதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கயல் சீரியல் புதியதொருட சாதனையைப் படைத்துள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெற்றிகரமாக ஓடிவரும் கயல் சீரியலில் பல பிரச்னைகள் வந்தாலும் கயல் எதிர்த்து நின்று சமாளிக்கும் விதம் அருமையாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

தமிழ் தொலைக்காட்சியில் தினமும் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றான கயல் 500 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. 500வது எபிசோட் என்று ஒளிபரப்பாகும் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கயல் சீரியலை ஒளிபரப்பும் சன்டிவி ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு இதனைக் கொண்டாட ரசிகர்களை அழைத்துள்ளது.

வரும் மே 14ம் தேதி ஒரு மணி நேர சிறப்பு எபிசோடாக இந்த தொடர் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக் கிழமையான அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகவுள்ளது.

கயல் சீரியல் 500 எபிசோட்களை எட்டியுள்ள நிலையில், இந்த சீரியலின் நாயகி கயல் சைத்ரா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார். சீரியலின் பயணம் தன் கெரியருக்கு உயிர் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

கயல் போன்ற சீரியலில் நடிப்பது தனக்கு பெருமை என்று தெரிவித்துள்ளார் 500 எபிசோட்களை எட்டியதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கயல் சீரியல் கடந்த 2021 அக்டோபர் மாதம் ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா, கார்த்திக் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் இவர்களுடன் கோபி, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், மீனா குமாரி, அய்யப்பன், ஹேமா ஸ்ரீகாந்த், அபினவ்யா, தீபக், ஜானகி தேவி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!