கவிஞர் கண்ணதாசன் யாரும் அறியா மறுபக்கம் பகுதி 2
Kavingar Kannadasan Unknown Facts In Tamil Part 2-1. கண்ணதாசன் கடைசியாக பணிபுரிந்த திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மூன்றாம்பிறை. இந்த படத்தோடு, பாடல்களெழுதுவதை நிறுத்திவிட்டு, நல்ல தமிழ் நூல்கள் எழுதத் திட்டமிட்டிருந்தார் அவர். ஆனால் அவரை மரணம் அழைத்துக் கொண்டது.
2. கண்ணதாசன் 54 வயதிற்குள், சுமார் 4500 படப் பாடல்களை எழுதியிருக்கிறார். சுமார் 4000 கவிதைகளையும் எழுதியிருக்கிறார். 6 படங்களைத் தயாரித்துள்ளார். எண்ணற்ற நூல்கள், கடன் தொல்லைச் சிக்கல்கள், அரசியல் பேச்சுக்கள், 3 திருமணங்களில் 14 குழந்தைகள், பல படங்களுக்குக் கதை−வசனம் எழுதியிருக்கிறார். 7 பத்திரிக்கைகளில் ஆசிரியர்−எழுத்தாளர் பொறுப்புக்கள் வகித்துள்ளார். இப்படி கண்ணதாசன் வாழ்வில் பல சம்பவங்களை செய்துள்ளார்.
3. எம்ஜிஆர் முதல்வரானதும் அரசவைக்கவிஞராக கண்ணதாசனை நியமித்தார். அது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. காரணம் எம்ஜிஆரை கண்ணதாசன் தன் நண்பராக ரசிக்கவில்லை. மனதளவில் அவருக்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தார் கண்ணதாசன்.
4. கண்ணதாசன், மதுப்பழக்கம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விசயம்தான். அவரை முதன்முதலில் வற்புறுத்தி குடிக்க வைத்தது கம்பதாசன் என்ற பாடலாசிரியர். காதல் தோல்விக்குப் பிறகு குடியை பழக்கமாக்கிக் கொண்டார். ஆனால் ஒருவகையில், இவருடைய வேகமாக பாடல் எழுதும் திறமை, டப்பிங் படங்களுக்கு விரைவாக வசனமெழுதும் திறமை ஆகியவற்றுக்கான உந்துதல் குடியில் கிடைப்பதாகவே நினைத்தார்.
5.சந்திரபாபு மார்க்கெட் உச்சத்திலிருந்த நேரம், கண்ணதாசனின் சொந்த படமான கவலையில்லாத மனிதன் படத்தில் நடிக்க அவரிடம் கால்ஷீட் கேட்க, அவர் சொதப்பிய சொதப்பலில் பல நாட்கள் வீணாகி படம் தாமதமாகி ரிலீஸாகி படுதோல்வியடைந்தது. ஆனால் பிற்காலத்தில் சந்திரபாபு தனது படத்தை தயாரிக்கையில், கண்ணதாசனே அத்தனை பாடல்களையும் எழுதி கொடுத்தார்.
6. கண்ணதாசன், பெரும்பாலும் மெட்டுக்களுக்குப் பாட்டெழுதுவதையே விரும்புவார். ஆரம்ப காலங்களில், தன் கைப்பட பாடல்களெழுதியவர், பிற்காலங்களில், தான் சொல்லச்சொல்ல, உதவியாளர்கள் மூலம் எழுதச்செய்தார்.
7. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.சுந்தரம், மிகவும் கண்டிப்பானவர். பெரிய பெரிய நாயகர்கள் கூட அவர் இருந்தால் பேசமாட்டார்கள். நடுங்குவார்கள். ஆனால், கண்ணதாசனிடம் மட்டும், அவர் இறுதிவரை, இரக்கமும், அன்பும் கொண்டிருந்தார். இவரும், சின்னப்பாதேவரும், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர்கள்.
8. எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்த முதல் படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் கண்ணதாசனுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், அதன் வசனத்தைச் சிறப்பாக எழுதிப் புகழ்பெற்றார்.
9. "பொண்ணுக்குத் தங்க மனசு" படத்தில் இடம்பெற்ற, "தேன் சிந்துதே வானம்" பாடல் மெட்டுக்குப் பாட்டெழுத, கண்ணதாசன் எடுத்துக்கொண்டது சுமார் 30 நிமிடங்கள்தானாம். இதே பாடலின் தெலுங்கு மெட்டுக்குப் பாட்டெழுத, தெலுங்குப் பாடலாசிரியருக்கு, 3,4 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.
10. இல்லறம்−துறவறம் பற்றிய சிறந்த போட்டிப் பாடலான "இது மாலை நேரத்து மயக்கம்" (படம்; தரிசனம்) பாடலை எழுத, கண்ணதாசன் எடுத்துக் கொண்ட நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu