கவின் ஜோடியாக இரண்டு நாயகிகள்! யார் யார் தெரியுமா?

கவின் ஜோடியாக இரண்டு நாயகிகள்! யார் யார் தெரியுமா?
X
கவினின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பது தெரியவந்துள்ளது.

கவின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை kavin next movie update நடைபெற்று வருகிறதாம். இருவருமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகள் என்பதால் அடுத்த படம் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா படத்தில் கவின் ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். காதலர்களுக்குள் ஏற்படும் மன கசப்பு, புரிதலின்றி பிரிவை ஏற்படுத்த அதனால் குழந்தையை தானே எடுத்து வளர்க்கும் நிலைக்கு ஆளாகிறான் ஒரு தந்தை. இதனை புரிந்துகொள்ளாமல் இருக்கும் காதலி, ஒரு சந்தர்ப்பத்தில் காதலன் பணிபுரியும் அலுவலகத்திலேயே வேலை செய்யும் நிலை ஏற்பட, அங்கு பல விசயங்கள் தெரியவருகிறது.

தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக நினைத்து இத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கிறார் காதலி. இது தெரியாமல் பெற்ற மகனை விட்டுவிட்டு சென்றுவிட்டதாக நினைத்து அவள் மேல் கோபத்தில் இருந்திருக்கிறான் காதலன். இருவரும் இணையும் போது கிளைமேக்ஸ் என அற்புதமாக படமாக்கியிருந்தார் இயக்குநர்.

'டாடா' திரைப்படத்தின் வெற்றியால் கவின் தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதில் ஒரு திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் இளன் இயக்குகிறார்.

தற்காலிகமாக 'ஸ்டார்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் வேலைகள் சில நாட்களாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படம் சஸ்பென்ஸ் கொண்ட காதல் நாடகம் என கூறப்படுகிறது.

கவின் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளனர். 'லவ் டுடே' படத்தில் நடித்து இந்தியா முழுக்க பிரபலமான இவானா இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்கும் முதல் நாயகி என்று கூறப்படுகிறது. அவரிடம் இந்த கதை குறித்தும் அவரது கதாபாத்திரம் குறித்தும் பேசி இயக்குநர் அவரை நடிக்க வைத்துவிடுவார் என்றே கூறப்படுகிறது. இன்னொரு நடிகையாக பரிசீலிக்கப்படுபவர் திவ்ய பாரதி, இவர் கடைசியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'பேச்சுலர்' படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு இளனுடன் ஏற்கனவே ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தனது மெல்லிசை ட்யூன்களுக்கு பெயர் பெற்றவர் மற்றும் இளனுடனான அவரது நட்பு படத்துக்கு பெரிய நன்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பில் kavin next movie update உள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!