நயன்தாராவுடன் முத்தக்காட்சியா? கவின் வெளியிட்ட புகைப்படம்..!

நயன்தாராவுடன் முத்தக்காட்சியா? கவின் வெளியிட்ட புகைப்படம்..!
X
காட்டுத்தீயாக பரவி வருகிறது கவின் வெளியிட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் அவர் நயன்தாராவுடன் நெருக்கமாக இருப்பது போல இருக்கிறது.

காட்டுத்தீயாக பரவி வருகிறது கவின் வெளியிட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் அவர் நயன்தாராவுடன் நெருக்கமாக இருப்பது போல இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கவினுக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இந்த புகைப்படம் அதில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில், தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் கவின். சின்னத்திரையில் கால் பதித்து, வெள்ளித்திரையில் வெற்றிக் கொடி நாட்டிய இவரது பயணம், உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சின்னத்திரை அறிமுகம்

விஜய் தொலைக்காட்சியின் 'கனா காணும் காலங்கள்' என்ற தொடரின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கினார் கவின். தொடர்ந்து, 'சரவணன் மீனாட்சி' தொடரில் 'வெட்டையன்' கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்தார். அந்த கதாபாத்திரத்தின் வெற்றி, கவினுக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று தந்தது.

'பிக் பாஸ்' பயணம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கவினின் அன்பான பேச்சு, நகைச்சுவை உணர்வு, மற்ற போட்டியாளர்களிடம் காட்டிய அக்கறை ஆகியவை ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தன. இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான கவின், சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகளைப் பெறத் துவங்கினார்.

வெள்ளித்திரை நாயகனாக

சின்னத்திரை நட்சத்திரமாக இருந்த கவின், தனது வெள்ளித்திரை பயணத்தை 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தின் மூலம் தொடங்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், கவினின் நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தது.

அடுத்து 'லிப்ட்' என்ற படத்தில் நடித்தார் கவின். அந்தப் படம், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓடிடி தளத்தில் வெளியானது. கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 'லிப்ட்' படத்தின் வெற்றி, கவினை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்த்தியது.

'டாடா' வெற்றி

தொடர்ந்து 'டாடா' என்ற படத்தில் நடித்தார் கவின். அந்தப் படம், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் கவினின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, இளம் தந்தையாக அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

ஸ்டாராக கவின்

ஸ்டார் படத்தில் கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் இந்த படம் கொண்ட எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இருந்தாலும் கவினின் நடிப்பு இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கவின் கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார்.

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கிஸ் திரைப்படம், அடுத்து நெல்சன் திலீப் குமார் தயாரித்து வரும் ப்ளடி பெக்கர் திரைப்படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார் கவின். இந்த இரண்டு படங்களும் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ள படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதியான தகவல்கள் இவைதான்.


நயன்தாராவுடன் கவின்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த விஷ்ணு எடவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கவின் ஒப்பந்தமாகியுள்ளாராம். அந்த படத்தில் கவினுடன் நயன்தாராவும் நடிக்கிறார்.

நயன்தாரா இந்த படத்தில் கவின் ஜோடி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்போது கவின் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!