கர்மா இஸ் பேக்: ரவீந்தர்-மஹாலட்சுமி ஜோடியை குத்தி காட்டிய வனிதா

கர்மா இஸ் பேக்: ரவீந்தர்-மஹாலட்சுமி ஜோடியை குத்தி காட்டிய வனிதா
X

பைல் படம்.

Vanitha Vijayakumar Latest News -தயாரிப்பாளர் ரவீந்தர்-மஹாலட்சுமி திருமணம் குறித்து நடிகை வனிதா செய்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vanitha Vijayakumar Latest News --பிரபல சீரியல் நடிகை மஹாலட்சுமி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே தேசிய அளவில் வைரல் ஆனது.

அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் வந்தாலும், ட்ரோல்கள் தான் அதிகம் வந்தது. ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் பணத்திற்காக மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என ட்ரோல்கள் வந்தது. அது பற்றி ரவீந்தர் மற்றும் ,மஹா இருவரும் பேட்டி அளித்து பதிலடி கொடுத்தனர்.

பலர் ரவீந்தருக்கு வாழ்த்து கூறினாலும் நடிகை வனிதா விஜயகுமார் இதுவரை வாழ்த்து கூறவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் வனிதா - பீட்டர் பால் திருமணம் செய்தது பற்றி ரவீந்தர் அந்த நேரத்தில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார். அதனால் அவர்கள் நடுவில் பெரிய பிரச்சனை நடந்தது. அதனால் தான் வனிதா இதுவரை ரவீந்தர் - மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி கருத்து கூறவே இல்லை.

இந்நிலையில் தற்போது வனிதா 'Karma is a B***h' என குறிப்பிட்டு பதில் அளித்து இருக்கிறார். மேலும் அடுத்தவர்கள் வாழ்க்கையை பார்க்க நேரம் இல்லாத அளவுக்கு பிசியாக இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!