தி கராத்தே கிட் அடுத்த பாகத்தில் ஜாக்கிசான்?

தி கராத்தே கிட்  அடுத்த பாகத்தில் ஜாக்கிசான்?
X

பைல் படம்.

Karate Kid 2 Latest News In Tamil-தி கராத்தே கிட் படத்தின் 2 ம் பாகத்தில் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜாக்கிசான் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Karate kid 2 latest news in tamil-1984 -ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘ தி கராத்தே கிட்’ திரைப்படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ‘ தி கராத்தே கிட்’ . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கும். பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்திருந்தனர்.

டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் ‘ட்ரே பார்க்கரி’ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை வாய்ப்புக்கள் சீனாவுக்கு இடம்பெயர, பிழைப்புக்காக மகனுடன் பெய்ஜிங்கில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். முற்றிலும் அமெரிக்க பழக்க வழக்கம் கொண்ட சிறுவன் ட்ரே பார்க்கர் பெய்ஜிங் சூழலில், மஞ்சள் கலாச்சாரத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் திரைக்கதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கதை தொடங்கும். அதனை தொடர்ந்து சிறுவன் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஜாக்கிசான் எவ்வாறு உதவுகிறார் என கதைக்களம் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும். இந்த படம் 2010 ஆண்டு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது.

இதனையடுத்து இப்படத்தின் 2 ம் பாகம் விரைவில் தயாரிக்க உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜாக்கிசான் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஜாக்கிசான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!