கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று காலமானார்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று காலமானார்
X

நடிகர் புனித் ராஜ்குமார்.

பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.

பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் நெஞ்சுவலி காரணமாக காலை 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். விக்ரம் மருத்துவமனை முன்பு அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். ரசிகர்கள் கதறி அழும் காட்சி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு நகரில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த 1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்தார். பிரபல நடிகர் ராஜ்குமார்- பர்வதம்மா தம்பதியரின் மகன் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் இயக்குநராகவும் இருந்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!