பட்டையைக் கிளப்பும் கங்குவா டிரைலர்! மாஸ் காட்டும் சூர்யா!

பட்டையைக் கிளப்பும் கங்குவா டிரைலர்! மாஸ் காட்டும் சூர்யா!
X
கங்குவா டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறுத்தை சிவா பிறந்த நாளான இன்று அவர் இயக்கியுள்ள கங்குவா படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்தது. இந்த படம் நிச்சயமாக மிகப்பெரிய ஹிட்டாகி சூர்யாவுக்கும் சிவாவுக்கும் மிகப்பெரிய படமாக அமையும் என கோலிவுட்டே எதிர்பார்த்து வருகிறது.


சூர்யா கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள கங்குவாவில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இவர்களுடன் பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் மட்டும் 200 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் திரைக்கு வரும் முன்பே 400 கோடி பிசினஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் படம் இப்போதே லாபமாக இருக்கிறது.


அண்ணாத்த படத்தில் அடித்தவர்களே வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சிவா இந்த படத்தில் சம்பவம் செய்திருப்பார் போல என்று வியக்கின்றனர் ரசிகர்கள். ஆரம்பத்தில் ஒருமாதிரி பார்த்த சூர்யா ரசிகர்களே இப்போது சிவாவைக் கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே விஸ்வாசம், அண்ணாத்த என படங்களைக் கொடுத்த சிவாவா இது என ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.

படத்தில் பாதி பீரியட் படமாகவும் மீதி தற்கால படமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார் சிவா. அவருடன் இயக்குநர் குழுவும் நடிகர்களும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது டிரைலரிலேயே தெரிகிறது.


கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை இந்த ஆண்டிலும் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டிலும் வெளியிட காத்திருக்கிறார் சிவா. இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் அவர். இந்த டிரைலரிலேயே கடைசியில் ஒருவர் குதிரையில் வருவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள். அது யார் யார் என்று பலரும் பேசி வரும் நிலையில் அது நடிகர் கார்த்திதான் என்று சிலர் பேசி வருகின்றனர்.


இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியான கங்குவா டிரைலர் குறித்த உங்களின் பார்வை என்ன என்பதை கருத்துக்கள் பகுதியில் தெரிவியுங்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!