ஹாலிவுட் தரத்தில் கங்குவா! ரத்தம் தெறிக்க.. மிரள வைக்கும் காட்சிகள்... !

ஹாலிவுட் தரத்தில் கங்குவா! ரத்தம் தெறிக்க.. மிரள வைக்கும் காட்சிகள்... !
X
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் இணைந்து நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது நடித்து முடித்துள்ள படம் கங்குவா. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது கங்குவா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கங்குவா டீசர் ரிலீஸ் தேதி | kanguva teaser release date and time

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் இணைந்து நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சிறுத்தை சிவா | siruthai siva

சிறுத்தை படத்தின் மூலம் தமிழக மக்களிடையே நல்ல பெயரைப் பெற்ற சிவா, அடுத்தடுத்து 4 படங்கள் அஜித்குமாருடன் இணைந்து பணிபுரிய, தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவராக மாறினார். இவரது இயக்கத்தில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களும் இவருக்கு புகழைப் பெற்று தந்தது. அதிலும் விஸ்வாசம் படம் மற்ற 3 படங்களைக் காட்டிலும் மிகப் பெரிய வசூலையும் பெற்றது. பாடலுக்காக தேசிய விருதும் கிடைத்தது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பிளாப் படமான அண்ணாத்த படத்தை கொடுத்தவர், சூர்யாவுடன் இணையும் கங்குவா படத்தின் மூலம் எப்படியாவது விட்ட இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என போராடி வருகிறார். அதற்காக இரவு பகல் பாராமல் கங்குவா படத்துக்காக உழைத்து வருகிறார்.

தற்போது சூர்யா கங்குவா படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகளில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் அவர் வெளியே வருவதைப் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் இருக்கும் என்று கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தில் ஆதிகாலம் ஒரு பகுதியாகதான் வரும் என்று கூறப்பட்டாலும், இந்த டீசர் முழுமைக்கும் அதுமட்டுமே காட்டப்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்த காட்சிகள் மிகவும் உலகத் தரத்துடன் காணப்படுகிறது. பிரம்மாண்டமான தயாரிப்பாக இது உருவாகியுள்ளது என ரசிகர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

தமிழில் இதுமாதிரியான ஒரு படம் உருவாவது இதுதான் முதல் முறை என்றே தெரிகிறது. இந்த படத்துக்கு பிறகு சூர்யா உலக அளவில் பிரபலமான நடிகராக கொண்டாடப்படுவார் என்று கூறப்படுகிறது. உலகம் முழுக்க நிறைய மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அநேகமாக இந்தியாவிலேயே ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து வெறித்தனமான ஆட்டத்தை காண்பித்திருப்பார். இதனால் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகின்றனர். இப்போது கங்குவா படத்தில் அதற்கும் ஒரு படி மேலே செல்வார் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் | Kanguva producer

கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யாவின் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமின்றி இந்த படத்துக்கு தேவையான அனைத்து பண உதவிகளையும் கேட்ட நேரத்தில் செய்து கொடுத்துள்ளார். தயாரிப்பு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பே படம் இத்தனை சிறப்பாக வந்ததற்கு காரணம் என்கிறார்கள்.

மிரள வைக்கும் ஹீரோயின் | disha patani in kanguva

சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யா மொத்தம் 10 விதமான கெட்டப்களில் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்கிறார்கள். இருந்தாலும் இதுகுறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கங்குவா பேக்ரவுண்ட் மியூசிக் | Kanguva bgm download

கங்குவா படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது. ரசிகர்கள் பலரும் இதனை டவுன்லோடு செய்து தங்களது மொபைல் டியூனாக வைத்திருக்கிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்