சூர்யா பட ரிலீஸ் தேதி மாற்றம்!

சூர்யா பட ரிலீஸ் தேதி மாற்றம்!
X
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் அக்டோபர் 10 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வேட்டையனுடன் மோதாமல் தவிர்க்க இந்த முடிவு எனத் தகவல்.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'கங்குவா'. உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது.

3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த செ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் திரைப்படமும் இதே நாளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கங்குவா சொன்ன தேதியில் வெளியாகுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இதனிடையே, கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல் பரவி வருகிறது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி