Kanguva Update சூர்யாவை சிக்கலில் மாட்டிவிடும் சிறுத்தை சிவா? உண்மை என்ன?

Kanguva Update சூர்யாவை சிக்கலில் மாட்டிவிடும் சிறுத்தை சிவா? உண்மை என்ன?
X
சூர்யாவின் கங்குவா படத்தில் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா?

சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்தில் பெரிய அதிர்ச்சியே காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே ஓம் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படம் சந்தித்த பிரச்னைதான் என்பதால் சூர்யா படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்ய நெட்டிசன்கள் தயாராகி வருகின்றனர். எனினும் இது உண்மையா என்பது குறித்து அலசி ஆராயவேண்டியது அவசியம்.

விஜய், அஜித் இருவரும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களில் நடித்து பெரிய ஹிட் கொடுத்து கோலிவுட்டில் தான் யார் என்பதை நிரூபித்தார் சூர்யா. சரியான நேரத்தில் தனது திறமைகளை வளர்த்து ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்தவர் சூர்யா. ஆனால் கடந்த சில வருடங்களாக அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இடையில் ஜெய் பீம், சூரரைப் போற்று படங்கள் வெற்றி பெற்றாலும் அவற்றை தவிர மற்ற படங்கள் படுதோல்வியடைந்தன.


கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் படத்தைக் கொடுத்த பாண்டிராஜ் சூர்யாவை வைத்து எடுத்த படமும் சரியாக போகவில்லை. சராசரியான வெற்றியைப் பெற்ற இந்த படத்தால் சூர்யாவின் மைலேஜ் ஏறவில்லை என்பதால் மிகப் பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார் சூர்யா.

இந்த நேரத்தில் சிறுத்தை சிவா ஒரு கதையை சொல்ல, அண்ணாத்த படத்தை பார்த்தபிறகாவது அவர் யோசித்திருக்கவேண்டும். ஆனால் சிறுத்தை சிவா மீது நம்பிக்கை வைத்து கங்குவா படத்தை இயக்க வாய்ப்பளித்தார் சூர்யா. உலக அளவில் வெளியிடப்படவுள்ள படம், 10 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்தில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது என ஆசை காட்டி சூர்யாவை கவிழ்த்துவிட்டாரோ சிவா என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.


ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுரஷ் படத்தின் காட்சிகள் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படமாக வந்திருப்பதை அறிந்த பலரும் படத்தை கலாய்த்து தள்ளவிட்டனர். இதனால் பட வெளியீட்டை ஏழெட்டு மாதங்கள் தள்ளி வைத்து மறுபடியும் வேலை செய்து படத்தை கடந்த மாதம் வெளியிட்டனர். ஆனால் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை குறைந்தபட்சம் கதையாவது சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருந்தால் பரவாயில்லை என்றார்கள். அதே கதைதான் இப்போது கங்குவா படத்துக்கும் வந்திருக்கிறதாம்.

சூர்யா தலையில் பெரிய இடியை இறக்கியிருக்கிறார்கள் சிறுத்தை சிவா & டீம். படத்தின் ஆரம்ப காட்சிகள் பாராட்டும் விதமாக படம்பிடிக்கப்பட்டிருந்தாலும் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகளுக்கு பயங்கரமான செலவு வைக்கிறதாம். நாளுக்கு நாள் பட்ஜெட் எகிறிக் கொண்டே செல்கிறது இப்படியே போனால் மிகப் பெரிய செலவு வைக்கும் என தயாரிப்பாளர் படத்தின் செலவைக் குறைக்க ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்க, மறுபுறம் சூர்யா எனக்கு படம் பாக்குறமாதிரி வரணும் இல்லைனா நடக்குறதே வேற என சிறுத்தை சிவாவிடம் சொல்ல நடுவில் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம் சிவா.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!