கங்குவா திரைப்படத் தலைப்புக்கு இதுதான் அர்த்தமாம்! கொல மாஸ் சாரே!

Kanguva Meaning Tamil
X

Kanguva Meaning Tamil

Kanguva Meaning Tamil-சூர்யா நடித்து வரும் 42வது படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் கேட்டு வரும் சூழ்நிலையில், இந்த பெயர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kanguva Meaning Tamil

சூர்யா நடித்து வரும் 42வது படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் கேட்டு வரும் சூழ்நிலையில், இந்த பெயர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தின் படுதோல்விக்கு பிறகு சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இது சூர்யாவின் 42வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது கே இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யா 42 படம் அறிவிக்கப்பட்ட நாளிலிலிருந்து இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும், யார் நாயகி, எப்போது வெளியாகும், என்ன கதை உட்பட பல விசயங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன.

சூர்யா 42 ரிலீஸ் தேதி | suriya 42 release date

சூர்யாவின் கம்பீரமான தோற்றத்தில் சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் படப்பிடிப்பை விரைவில் முடித்துக் கொண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேநேரம் இந்த ஆண்டுக்குள் நிச்சயம் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் அடுத்த ஆண்டு பொங்கல் 2024 ரிலீஸுக்கு இந்த படத்தை தயார் செய்து வருவதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வரும் என்கிறார்கள்.

சூர்யா 42 பட்ஜெட் | suriya 42 budget

சுமார் 200 கோடி பட்ஜெட்டில் சூர்யா 42 படம் தயாராகி வருகிறது. கே இ ஞானவேல் ராஜா வின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. படம் கடந்த ஆண்டே பேசப்பட்டு, பின் படப்பிடிப்புகளுக்கான முன் தயாரிப்பு பணிகளில் சிறுத்தை சிவா டீம் ஈடுபட்டு வந்தது. கடந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் துவங்கியது. கோவாவிலும் சென்னையிலும் பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

சூர்யா 42 படப்பிடிப்பு முடியும் நாள் | suriya 42 shooting wrap

கோவாவில் கிட்டத்தட்ட 100 நாட்கள் இந்த ஷூட்டிங் நடந்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு பக்கம் பாடல் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஜூலை மாதத்திலிருந்து தொடர் அப்டேட்டுகள் வந்து குவியும் என்கிறார்கள்.

சூர்யா 42 பிசினஸ் | suriya 42 pre business

சூர்யா 42 படத்தின் முன் வியாபாரங்கள் பற்றிய தகவல்கள் சில வாரங்களுக்கு முன்பு லீக்காகி இருந்தன. அவற்றில் முக்கியமாக ஹிந்தி ரைட்ஸ் மட்டும் பல கோடிக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. மொத்தமாக ரிலீசுக்கு முன்னரே 500 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா 42 தலைப்பு | suriya 42 title

வரலாற்று புனைவு கதையை மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இதில் சூர்யா 10க்கும் அதிகமாக கெட்டப் களில் வருகிறாராம். கிட்டத்தட்ட 10 மொழிகளில் ஆரம்பத்தில் படத்தை வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கங்குவா அர்த்தம் | kanguva meaning

கங்குவா எனும் பெயர் சூப்பர் ஹீரோவுக்கு பொருத்தமானதாக இருக்கும் பெயர் என்றும் அந்த சூப்பர் ஹீரோவுக்கு தீயின் சக்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் கதாபாத்திரம் பல்வேறு சக்திகளைக் கொண்டதாகவும் முக்கியமாக தீயின் சக்தி கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ என்பதை தென்தமிழகத்தில் கங்கு என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். தீயின் சக்தியைக் கொண்ட மாவீரன்தான் கங்குவா.

சூர்யா 42 மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் | suriya 42 motion poster | suriya 42 first look

சூர்யா 42 மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. கையில் வில்லம்புகளுடன், தீப்பிழம்புகளுக்கு மத்தியில் நிற்கும் சூர்யாவை பின்புறத்திலிருந்து பார்ப்பது போல போஸ்டர் அமைந்திருந்தது.

சூர்யா 42 கதை | suriya 42 story based on

கதை விரைவில் அப்டேட் செய்யப்படும்

சூர்யா 42 டிரைலர் ரிலீஸ் தேதி | suriya 42 trailer release date

சூர்யா 42 படத்தின் டிரைலர் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 42 முதல் பாடல் | suriya 42 first single

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூர்யா 42 நாயகி | suriya 42 heroine

திஷா பதானி. சூர்யா 42 கங்குவா படத்தின் நாயகி திஷா பதானி. மேலும் படத்தில் இன்னொரு நாயகியும் இருப்பதாக கூறப்படுகிறது. சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூரும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!