/* */

கமல் தந்த கனிந்த முத்தம்..!

'விக்ரம்' சக்ஸஸ்... நடிகர் கமல்ஹாசனின் முத்தப் பரிசு... லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், விஜய்சேதுபதி, அனிருத்துக்கு...

HIGHLIGHTS

கமல் தந்த கனிந்த முத்தம்..!
X

பைல் படம்.

பாக்ஸ் ஆபீஸின் வெற்றிப் படமாக வலம் வந்துகொண்டிருக்கிறது கமலின் 'விக்ரம்'. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல், ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட நட்சத்திர அணிவகுப்பில் ஜூன் 3-ம் தேதி வெள்ளித்திரையில் பல்வேறு மொழிகளில் உலகெங்கும் வெளியான ' விக்ரம்' தற்போது மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே உள்ள பல சாதனைகளை முறியடித்துள்ள 'விக்ரம்' வெற்றிப் பாதையில் விரைந்துகொண்டிருக்கிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்வு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் பிரமாண்டமாக நடந்தது. அந்நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கனிவோடு கன்னத்தில் கனிந்த முத்தமிட்டு தன் நெஞ்சம் நிறைந்த நேசத்தைப் பரிசாகப் பகிர்ந்தார் கமல்ஹாசன்.

அந்த தித்திப்புத் தருணத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'விக்ரம்' வெற்றியைப் போன்றே ஏராளமான ரசிகர்கள் லோகேஷின் புகைப்படப் பதிவுக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் தாராளமாகக் குவித்து வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 2:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...