மீண்டும் வில்லனாக கமல்! சம்பளம் 150 கோடியாம்!

மீண்டும் வில்லனாக கமல்! சம்பளம் 150 கோடியாம்!
X
கமல்ஹாசன் வேறொரு நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் விரைவில் வில்லனாக நடிக்கும் ஒரு படத்துக்காக 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சம்பளத்தை விட அதிகம் என்பதால் அது என்ன படம் என ரசிகர்கள் வியந்துள்ளனர்.

கமல்ஹாசன் ஏற்கனவே தசாவதாரம் படத்தில் இங்கிலிஷ்மேன் கெட்டப்பில் பிளட்சர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதே மாதிரியான ஒரு ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் தான் மீண்டும் நடிக்கப்போகிறாராம்.

விக்ரம் படத்துக்கு பிறகு மீண்டும் ஜெட் வேகத்தில் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்ததும், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் இன்னொரு புதிய படத்திலும் நடிக்க அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன், பா ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் என அடுத்தடுத்து பல திட்டங்களை வகுத்துள்ளனர். இந்நிலையில் இடையில் ஒரு படத்தில் வில்லனாகவும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் வில்லனாக நடிக்கப்போவது வேறு யார் படத்திலும் அல்ல, பாகுபலி நாயகன் பிரபாஸ் படத்தில்தான். இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையிலும் இது மிகவும் நெருங்கிய வட்டாரத்திலிருந்து வந்த செய்தி என்பதால் நம்பலாம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். சயின்ஸ் பிக்சன் கதையான இந்த படத்தில் நிறைய குழப்பங்களும், டுவிஸ்ட்டுகளும், அதிசயங்களும் நடக்கும்படியாக கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.

பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன், திஷாபதானி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க பட தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் முன்வந்துள்ளதாம்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் தயாராகியுள்ள அனைத்து படங்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் இந்த படம் இருக்கும் எனவும், இந்த படத்தில் கமல்ஹாசன் போர்சன் வெறும் 20 நாளைக்கு மட்டுமே ஷூட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!