சிக்கலில் சிம்பு! கமல்ஹாசன் சொல்லியும் நடக்கலையா?

சிக்கலில் சிம்பு! கமல்ஹாசன் சொல்லியும் நடக்கலையா?
X
சிக்கலுக்கு காரணம் ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம்தான். இவர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்றாலும் தொழில் வேறு நட்பு வேறு என இந்த பிரச்னையைக் கிளப்பி இருப்பதாக கூறுகிறார்கள்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் STR48. இந்த படத்தினை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை எடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர்தான் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க சென்ற சிம்புவுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

சிக்கலுக்கு காரணம் ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம்தான். இவர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்றாலும் தொழில் வேறு நட்பு வேறு என இந்த பிரச்னையைக் கிளப்பி இருப்பதாக கூறுகிறார்கள்.

ஐசரி கணேசன் தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு புகார் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிம்பு, ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து 3 படங்கள் நடித்து கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறி சிம்பு செயல்பட்டிருப்பதாகவும், தனது படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே வேறொரு நிறுவனத்தில் படத்தில் நடிக்க சென்றுவிட்டதாகவும் ஐசரி கணேசன் புகாரளித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிமஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வரும் புதிய படத்தில் சிம்பு கலந்து கொண்டு நடிக்கிறார் என்கிற செய்தி ஐசரி கணேசன் காதுக்கு போய் சேர, அவர் கடுப்பாகியிருக்கிறாராம்.

ஏற்கனவே கமல்ஹாசனிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார் ஐசரி கணேசன். தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போதே கேட்டிருந்தார் ஐசரி கணேசன்.

இந்நிலையில் கமல்ஹாசன் நிறுவனம் மீதே புகார் கொடுத்தால் அவர் ஐசரி கணேசன் மீது கோபம் கொள்வார் என்றே கூறப்படுகிறது. இருந்தாலும் இருவரும் நண்பர்கள் என்பதால் பேசி சுமூகமாக தீர்த்துக்கொள்வார்கள் என்று கூறுகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!