கோபத்தில் நாற்காலியை எட்டி உதைத்த நடிகர்! மிரண்ட படக்குழு!

கோபத்தில் நாற்காலியை எட்டி உதைத்த நடிகர்! மிரண்ட படக்குழு!
X
இவரை பேட்டி காண போன செய்தியாளர் அமர ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அவர் அமரச் செல்லும்போது அந்த நேரத்தில் ஒரு நிமிசம் என்று கூறியவர் அந்த நாற்காலியா காலால் தூக்கி மேலும் கீழும் ஆட்டிப் பார்த்து பின் காலால் எட்டி உதைத்திருக்கிறார்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது தன்னை சந்திக்க வந்த செய்தியாளர் முன்னிலையில் அவர் அமரப் போடப்பட்டிருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்து கோபத்தில் திட்டிய நடிகரைப் பற்றிய தகவலை அதே செய்தியாளர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நம்ம கமல்ஹாசன்தான்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என பல மொழிகளிலும் கதாநாயகனாக நடித்த ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்தான். அவரின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள் பல சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருக்கின்றன. பல மொழிகளிலும் சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்த நடிகராக கமல்ஹாசன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் படப்பிடிப்பில் ஒருமுறை செய்தியாளர் பேட்டி எடுக்க சென்றிருந்த நிலையில் மேற்சொன்ன சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டே அதிர்ந்திருக்கிறது. அவ்வளவு கோபக்காரரா கமல்ஹாசன் என்பதை அவர் அன்று புரிந்துகொண்டுள்ளார்.

சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கமல்ஹாசன்தான். களத்தூர் கண்ணம்மா தொடங்கி சமீபத்தில் வெளியான விக்ரம் வரை மொத்தம் 232 படங்களை நடித்து முடித்துவிட்டார். தற்போது அவரது 233வது படமான இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்துதான் ஹெச் வினோத், மணிரத்னம் ஷூட்டிங்க துவங்கும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து புதிய படங்களையும் தயாரித்து வருகிறார் கமல்ஹாசன்.

இவரை பேட்டி காண போன செய்தியாளர் அமர ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அவர் அமரச் செல்லும்போது அந்த நேரத்தில் ஒரு நிமிசம் என்று கூறியவர் அந்த நாற்காலியா காலால் தூக்கி மேலும் கீழும் ஆட்டிப் பார்த்து பின் காலால் எட்டி உதைத்திருக்கிறார்.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகுதான் மற்றவர்களுக்கு உண்மை புரிய வந்துள்ளது. அந்த நாற்காலி அமர்வதற்கு ஏற்ற வகையில் சரியானதாக இல்லையாம். இப்படித்தான் விருந்தினர் அமர்வதற்கு நாற்காலி போடுவீர்களா என்று கேட்டு சத்தம் போட்டிருக்கிறார். அதன்பிறகு வேறொரு நல்ல நாற்காலியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தகவலை செய்தியாளர் செய்யாறு பாலு தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!