கமல்ஹாசனின் ‘இந்தியன் 2 ’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2 ’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்
X

கமல்ஹாசன்.

சென்னையில் இந்தியன் 2 படத்தின் ஒரு மாத கால படப்பிடிப்பை கமல்ஹாசன் மீண்டும் தொடங்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் பிஸியாக இருந்துவந்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்து அவரது படத்தின் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 30 நாட்கள் தொடரும் சென்னை ஷெட்யூல் இன்று பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்குகிறது.

கமல்ஹாசன் தனது பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கமிட்மென்ட்களை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கினார். திருப்பதியில் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு, இந்தியன் 2 படக்குழு ஒரு மாத கால படப்பிடிப்பிற்காக சென்னைக்கு திரும்பியுள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு சென்னை ஆதித்யராம் ஸ்டுடியோவில் கமல்ஹாசன் மற்றும் குழுவினர் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் சென்று வந்தார். திருப்பதியில் சில முக்கிய காட்சிகளை படக்குழுவினர் எடுத்துள்ளனர். திருப்பதி ஷெட்யூலை முடித்துவிட்டு, இந்தியன் 2 படக்குழு சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியது. படக்குழுவினர் தொடர்ந்து 30 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்துவார்கள். இது மிக நீண்ட ஷெட்யூல் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டிலும் ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூல்களை திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படபிடிப்பிலும், தெலுங்கு நடிகர் ராம் சரணின் ‘ஆர்சி 15’ படப்பிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கி இரண்டு திரைப்படங்களையும் எந்த சிக்கலும் இல்லாமல் இயக்கி வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை இன்று துவங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்தியன் 2 படம், ஷங்கர் இயக்கிய ஒரு விழிப்புணர்வு த்ரில்லர். இப்படம் 1996-ல் அதே பெயரில் வெளியான படத்தின் தொடர்ச்சி ஆகும். கமல்ஹாசன் சேனாபதியாக நடித்துள்ள நிலையில், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் மே மாதத்திற்குள் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதேசமயம் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளையும் சமீபத்தில் தொடங்கியுள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படம் 2020 மற்றும் 2021 ம் ஆண்டில் நிதி மற்றும் பிற சிக்கல்களில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!