மலையாள பிரபலம் மோகன் லாலுடன் சேர்ந்து நடிக்க உள்ள கமல்ஹாசன்

மலையாள பிரபலம் மோகன் லாலுடன் சேர்ந்து நடிக்க உள்ள கமல்ஹாசன்
X

kamal acting with mohanlal, kamal haasan latest newsமோகன் லாலுடன் கமல் ஹாசன்.

kamal acting with mohanlal, kamal haasan latest newsமலையாள பிரபலம் மோகன் லாலுடன் மலைக்கோட்டை வாலிபர் என்ற படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.

kamal acting with mohanlal, kamal haasan latest newsமலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுடன் கவுரவ தோற்றத்தில் கமல்ஹாசன், ஜீவா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kamal acting with mohanlal, kamal haasan latest newsஉலக நாயகன் கமல் ஹாசனின் பிக்பாஸ் 6 பொழுது போக்கு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது அந்த பொழுது போக்கு நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் கமல் ஹாசன் மீண்டும் திரைப்பட நடிப்பில் முனைப்பு காட்டி வருகிறார்.

kamal acting with mohanlal, kamal haasan latest newsமலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்கி பிரபலமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்டு செய்யும் புதிய படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சமீபத்தில் ராஜஸ்தான் சென்று முக்கிய காட்சிகளை படமாக்கினர்.

kamal acting with mohanlal, kamal haasan latest newsஇந்த நிலையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுடன் கவரவ தோற்றத்தில் கமல்ஹாசன், ஜீவா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் படக்குழுவினர் அணுகி பேசி வருவதாகவும் அவர்கள் நடிக்க சம்மதிப்பார்கள் என்றும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் கமல்ஹாசனும், ஜீவாவும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

kamal acting with mohanlal, kamal haasan latest newsஏற்கனவே கமல்ஹாசன் நடித்து 2009-ல் திரைக்கு வந்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் மோகன்லால் நடித்து இருந்தார். இதுபோல் விஜய், மோகன்லால் நடித்து இருந்த 'ஜில்லா' படத்தின் பாடல் காட்சியொன்றில் ஜீவா தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!