Kamal Haasan & H Vinoth படத்தின் சூப்பர் அப்டேட்! எப்போது வெளியாகுது தெரியுமா?
கமல்ஹாசன் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் புதிய படத்தினைக் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்துக்கு பிறகு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது உலகநாயகன் கமல்ஹாசனின் மார்க்கெட். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வசூலைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன். அடுத்தடுத்து பல பெரிய படங்களில் அவரை புக் செய்ய காத்துக் கிடக்கின்றனர் தயாரிப்பாளர்கள். அந்த வகையில் அடுத்து ஆண்டு மட்டும் 4 படங்கள் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கின்றன.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னத்துடன் இணையும் படம், ஹெச் வினோத் படம் என 2024ம் ஆண்டுக்கு 4 படங்கள் வரிசையெடுத்து நிற்கின்றன. இதில் ஹெச் வினோத் படத்தின் அப்டேட் தான் தற்போது கிடைத்துள்ளது. அது வரும் ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்.
விக்ரம் படம் துவங்கும் முன்பாக கமல்ஹாசன் பல அரசியல்வாதிகளை ஒரு இடத்துக்கு வரவழைத்து அவர்களைப் போட்டுத் தள்ளும் வகையில் ஒரு டைட்டில் லுக் டீசரை வெளியிட்டார்கள். அதே போல லியோ படத்துக்கும் சாக்லேட் செய்வது போல ஒரு டைட்டில் லுக் டீசரை வெளியிட்டார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் ஹெச் வினோத் படத்துக்கும் இது போன்ற ஒரு டைட்டில் லுக் டீசர், கிளிம்ஸ் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள்.
இதுகுறித்த அப்டேட் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த கிளிம்ஸ்ல் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu