காலை வாரிய சிம்பு..! கோபத்தில் தயாரிப்பு தரப்பு! கமல் தலையீடு?
சிம்பு சினிமாவில் தனது புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரிய சாமி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வாரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் சிம்புவை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள். சரியாக ஷூட்டிங் வரமாட்டார். டப்பிங் லேட் செய்வார். சரியாக ரெஸ்பான்ஸ் செய்யமாட்டார் என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது. இதனால் பல ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார் சிம்பு. அவர் மீது ரெட் கார்டும் போடப்பட்டு பல சர்ச்சைகளுக்கும் ஆளானார்.
உடல் எடையைக் குறைத்து புதுப்பொலிவுடன் களமிறங்கி ஆடி வருகிறார் சிம்பு. முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தபோது அடுத்ததாக மீண்டும் அதே நிறுவனத்துக்கு படம் செய்ய வேண்டும் என ஒப்பந்தமாகியிருந்தாராம். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருந்தது வெந்து தணிந்தது காடு திரைப்படம். இதன் முதல் பாகம் மட்டுமே படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாகம்தான் முக்கியமானது எனவும் அது இன்னமும் கதையாக தாள்களில்தான் இருக்கிறது என்றும் இயக்குநர் கூறியிருந்தார். இதனால் வெந்து தணிந்தது காடு 2ம் பாகத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் கமிட் ஆகி இருப்பதால், பிரச்னை எழுந்தது.
சிம்புவிடம் நேரடியாகவே வேல்ஸ் நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் சிம்பு இதுகுறித்து பேசவே இல்லையாம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பு தரப்பு, நேரிலேயே சிம்புவிடம் பேச முயற்சித்ததாம். ஆனால் சிம்பு நாட்டிலேயே இல்லை வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது தரப்பில் இனி இது சம்பந்தமாக பேசவேண்டாம் என்றும் அடுத்ததாக உங்களது படத்தில் நடிப்பார் என்றும் கூறியுள்ளார்கள்.
ஐசரி கணேசனுக்கு இந்த விசயம் தெரிந்ததும் அவர் சிம்புவுக்கே அழைத்து பேசியிருக்கிறார். அப்போது சிம்பு தனது நிலையைக் கூறியுள்ளார். நீங்கள் கமல்ஹாசன் சாரிடம் பேசுங்கள் சார் என்றதும் ஐசரி கணேசனால் எதுவும் சொல்லமுடியவில்லை.
சில நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் அலுவலகத்திலிருந்து ஐசரி கணேசன் அலுவலகத்துக்கு அழைப்பு போயிருக்கிறது. அதில் கமல்ஹாசன் சார்பாக பேசிய நிர்வாக மேலாளர் இது குறித்து கமல்ஹாசன் சார் வந்ததும் உங்களிடம் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு ஐசரி கணேசன் பெருந்தன்மையுடன் இல்லை இல்லை கமல்ஹாசன் சார் வருவது இருக்கட்டும். உங்கள் படத்தை நன்றாக எடுத்து முடியுங்கள். நாங்கள் அடுத்து எடுத்து கொள்கிறோம் என்று கூறிவிட்டாராம்.
கமல்ஹாசனும் ஐசரி கணேசனும் நட்பையும் தாண்டி குடும்பமாக இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசனிடம் இதுகுறித்து நேரடியாக பேசினால் தவறாக எடுத்துவிடக்கூடாது என தயங்கியிருக்கிறார் ஐசரி கணேசன். இந்த விசயம் கமல்ஹாசன் காதுக்கு செல்ல, விரைவில் உங்களைச் சந்திக்கிறேன் என்று தெரிவித்தாராம் கமல்ஹாசன். நிலைமை அப்படி அமைந்துவிட்டது. கெட்டப் எல்லாம் போட்டிருக்கிறார். இனி மாற்றினால் சரியாக இருக்காது என படக்குழு சார்பில் ஐசரி கணேசனை சமாதானம் செய்துவிட்டார்களாம்.
இந்நிலையில், சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் புகைந்து வரும் ஒரு பிரச்னை அப்படியே இருக்கிறது என்பதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu