Indian 2ல் கமல்ஹாசனின் சம்பளம் இத்தனை கோடியாம்...!
Kamal Haasan Salary for Indian 2
Kamal Haasan Salary for Indian 2-கமல்ஹாசன் சம்பளம் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு 2 மடங்காக உயர்ந்தது. கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியன் 2 படத்தில் சம்பளமாக பெறுகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நட்புக்காக சூர்யா ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் இணைய திட்டமிட்டார். அதில் ஹெச் வினோத், மணிரத்னம், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கௌதம் வாசுதேவ் மேனன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களோடு கூட்டணி சேரவுள்ளார். இதற்காக அவர் கால்ஷீட்டை பிரித்து கொடுத்துள்ளார். மேலும் வரும் தேர்தலின்போதும் அதற்காகவும் திட்டம் வகுத்தி செயலாற்றி வருகிறார்.
தமிழின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் விஜய்யும், கமல்ஹாசனும் இருக்கிறார்கள். இருவரும் 130 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் விஜய் லியோ படத்துக்கு இதை விட அதிக சம்பளம் பெறவார் என்றும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் எனும் பெயரில் அடுத்தடுத்து படங்களை கணெக்ட் செய்து வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளும் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து கைதி 2 படத்தையும் அதனைத் தொடர்ந்து விக்ரம் 2 படத்தையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் துரிதமாக நடித்து வருகிறார். மாதம் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்த கமல்ஹாசன், இந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை ஷங்கர் இயக்க மற்றவர்களின் காட்சிகளை அவரின் துணை மற்றும் உதவி இயக்குநர்கள் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனும் மற்ற நடிகர்களும் இந்த படப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த 1996ம் ஆண்டு கமல்ஹாசன் - ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். இதில் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். மகன் சந்துரு லஞ்சம் வாங்கி பிரேக் இல்லாத வாகனத்துக்கு அனுமதி கொடுக்கவே அதனால் பலர் இறந்துவிடுகின்றனர். இந்த விசயம் சேனாதிபதிக்கு தெரிய வந்ததும் மகனையும் கொல்கிறார். லஞ்சம் வாங்குபவர்களை கொன்றுவிட்டு தப்பிக்கும் சேனாதிபதி, இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். கிளைமேக்ஸில் அவர் இந்தியனுக்கு சாவில்லை என வந்து நிற்கிறார்.
சூப்பர் ஹிட் படமான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எடுக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் இடையிடையில் பல பிரச்னைகளால் தாமதமாகி பின் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.
விக்ரம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் சென்னை, திருப்பதி என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu