BiggBoss 7 கமல்ஹாசனுக்கு மொத்தமாக அள்ளி கொடுக்கும் பிக்பாஸ்! எத்தனை கோடிகள் தெரியுமா?

BiggBoss 7 கமல்ஹாசனுக்கு மொத்தமாக அள்ளி கொடுக்கும் பிக்பாஸ்! எத்தனை கோடிகள் தெரியுமா?
X
கமல்ஹாசனுக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சம்பளமாக எத்தனை கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள். அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. வெற்றிகரமாக 6 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 7வது சீசன் எப்போது துவங்கும் என தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சி புரோமோவை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்ட முயற்சி செய்து வருகிறது நிகழ்ச்சி தரப்பு.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஒளிபரப்பாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இதற்கான புதிய ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. புரோமோவில் தோன்றிய கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல எடிட் செய்யப்பட்டிருந்தது புரோமோ.

இரண்டு வீடுகள்

கமல்ஹாசனே தோன்றி பேசியுள்ள இந்த புரோமோவில் பிக்பாஸ் வீட்டுல ஆளுங்கள விட்டா வீடு ரெண்டாகும்னு சொல்வாங்க ஆனா இப்ப நிஜமாவே ரெண்டு வீடாகிடிச்சு என்கிறார். அதாவது இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகளில் கண்டெஸ்டன்ட்கள் இருப்பார்களாம். முதல் வீட்டில் சின்னத்திரை பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இரண்டாவது வீட்டில் புதிய முகங்கள் கலந்துகொள்வார்கள். பொதுமக்களிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் பலருக்கும் தெரியாத நபர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இரண்டு வீடுகளுக்கும் தனித்தனி வீட்டுத் தலைவர் இருப்பார். இரு வீடுகளுக்கும் இடையே போட்டிகள் நடத்தப்படும். அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீடுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும் உள்ளிட்ட நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மூன்றாவது புரோமோ

தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான 2 வது புரோமோவில், உலக நாயகன் டபுள் ஆக்க்ஷனில் தோன்றியிருந்தார். இந்த முறை இரண்டு வீடு என்று கூறி 2 பிக்பாஸ் வீடுகளில் போட்டியாளர்கள் விளையாட போவதை உறுதி செய்தார். ஆனால் அதிலும் மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் இது குறித்து தான் கமல் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் பேசியுள்ளார்.

ஒரு கமல், இந்த முறை ரெண்டு வீடுனா... ஒரு வீடு சின்னதா இருக்குமோ, இரண்டு வீட்லயும் 10 - 10 பேர சரி பாதியா பிரிச்சுடுவீங்களா என கேள்வி கேட்க, அதற்கு மற்றொரு கமல், ஒரு Clue கொடுத்தா பிரிச்சு மேஞ்சிடுவீங்களே என கூறி, இந்த புரோமோவில் பேசியுள்ளார். கமல்ஹாசனின் இந்த புதிய புரோமோ நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

கமல்ஹாசன் சம்பளம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு வாரத்தில் ஒரு நாள் கால்ஷீட்டும், அதற்கு சம்பளமாக 130 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முந்தைய சீசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய கமல்ஹாசன், விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றி காரணமாக அடுத்தடுத்து பெரிய அளவில் பல படங்களிலும் புக் ஆனார். இந்திய மொழிகளிலும் பல படங்கள் நடிக்கிறார் கமல்ஹாசன்.

போட்டியாளர்கள் யார்? யார்?

இதனிடையே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது. அதன்படி இந்த முறை மாகபா ஆனந்த், ஜாக்குலின், காக்கா முட்டை விக்னேஷ், நடிகையும் மாடலுமான தர்ஷா குப்தா,நடிகர் பிருத்விராஜ், , நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளர் ரக்‌ஷன், நடிகைகள் உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி (சீரியல் நடிகை), அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா தாஹா, நிலா , ட்ரெண்டிங் டிரைவர் ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதன்டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் பிக் பாஸ் 6 போட்டியாளர் ரச்சிதாவின் கணவர் தினேஷ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி காமெடியன் சரத் ராஜ் ஆகியோர் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!