கமல் இல்லை.... அந்த ரோலுக்கு முதல் சாய்ஸ் இவர்தானாம்...!
கல்கி படத்தில் கமல்ஹாசன் முதலில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக வேறொரு நடிகர்தான் பரிசீலிக்கப்பட்டிருந்தார் என படக்குழுவில் இருந்த ஒருவரே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே முன்னோடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கமல்ஹாசன். இந்திய சினிமாவின் புதிய தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் கமல்ஹாசனே முதன்முதலில் உபயோகப்படுத்தியிருப்பார். அந்த அளவுக்கு அப்டேட்டாகவும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல முகங்களைக் கொண்டவர். 1959ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று வரை இந்திய சினிமாவின் முகமாக இருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் சில்வர் ஜூப்ளி ஹிட்டுகளைக் கொடுத்தவர்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் கல்கி. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, பிரம்மாண்டமாக வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க, அதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
1100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்ற கல்கி திரைப்படத்தில் சுப்ரிம் யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது கமல்ஹாசன் இல்லையாம். கமல்ஹாசன் நடித்த யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால்தான் முதலில் பரிசீலனை செய்யப்பட்டாராம். ஆனால் அவரை விட பொருத்தமாக இருப்பது கமல்தான் என இயக்குநர் விடாப்பிடியாக கமல்ஹாசனை உள்ளே கொண்டு வந்தாராம். கிட்டத்தட்ட 1 வருடம் கமல்ஹாசன் சம்மதிக்கும் வரை காத்திருந்தார்களாம்.
இதனை இந்த படத்தின் பணிபுரிந்த வேணுகோபால் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன்தான் நிச்சயமாக பொருத்தமாக இருந்தார் என அவரும் தெரிவித்திருந்தார். மேலும் பிரபாஸ், அமிதாப் பச்சன்தான் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்ட நடிகர்கள் என்றும் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu