ஷாருக்கானை பாராட்டிய கமல்ஹாசன்! ஜவான் பட விழாவில் ருசிகரம்!

ஷாருக்கானை பாராட்டிய கமல்ஹாசன்! ஜவான் பட விழாவில் ருசிகரம்!
X
ஜவான் பட விழாவில் வீடியோ மூலகமாக கலந்துகொண்டு பேசி ஷாருக்கானை பாராட்டிய கமல்ஹாசன்!

சென்னையில் நடைபெற்ற அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள “ஜவான்” படத்தின் அறிமுக விழாவில் நடிகர் கமல்ஹாசன் காணொலி மூலம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுக்க மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இன்னும் பல முன்னணி நடிகைகள் தோன்றுகிறார்கள். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் அறிமுக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் காணொலி மூலம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்த கமல்ஹாசன், “இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், என் வாழ்த்துக்களை ஷாருக்கான் மற்றும் படக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் இந்திய சினிமாவின் திறமையாளர்களை ஒன்றிணைத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக ஷாருக்கான் அன்பின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். கடினமான காலகட்டங்களிலும் கூட உங்கள் புன்னகை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒளியாய் இருக்கிறது. இப்படமும் நீங்களும் வெற்றியடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லாவற்றையும் கண்ணியத்துடன் நீங்கள் கையாளும் விதம் ஊக்கமளிக்கிறது” என்று பேசினார்.

கமல்ஹாசன் வீடியோ மூலம் கலந்து கொண்டாலும் மாணவர்கள் அவரது முகத்தைப் பார்த்ததுமே உற்சாகத்தில் கைத்தட்டி விசில்களை பறக்கவிட்டனர். மேலும் அவர் பேசி முடியும் வரை சத்தம் ஓயவில்லை. கமல்ஹாசன் பேச ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று கூறிக்கொண்டு பேசியது அனைவருக்கும் பிடித்ததாக அமைந்தது.

கமல்ஹாசனின் வாழ்த்துகளுக்கு அதே மேடையிலேயே நன்றி தெரிவித்த ஷாருக்கான், “கமல்ஹாசன் என் வாழ்வின் ஒரு பகுதி. அவரது பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அவரது வாழ்த்துக்களை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்று கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்