பா.ரஞ்சித், வெற்றிமாறனுடன் கமல்ஹாசன்! வேற லெவல் அப்டேட்!

பா.ரஞ்சித், வெற்றிமாறனுடன் கமல்ஹாசன்! வேற லெவல் அப்டேட்!
X

கமல்ஹாசனுடன் சந்தானபாரதி, தரணி, பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் இருக்கும் புகைப்படம்

தங்கலான் படத்தை முடித்துக் கொண்டு மே மாத இறுதியில் கமல்ஹாசனுடன் இணைவார் பா.ரஞ்சித் என்று கூறுகிறார்கள். இடையில் வெற்றிமாறனும் கமல்ஹாசனுக்காக ஒரு ஸ்க்ரிப்டை தயார் செய்து வைத்து காத்திருக்கிறாராம்.

கமல்ஹாசனுடன் பிரபல தமிழ் சினிமா இயக்குநர்கள் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் இருப்பதுதான். கமல்ஹாசனுடன் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் பயணிப்பார்கள் என்கிற தகவல் வந்திருப்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். இந்த படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியாக மாறினார் கமல்ஹாசன். அந்த அளவுக்கு இந்த படத்தின் வசூல் சாதனை இருந்தது. இதனால் லோகேஷ் கனகராஜை கொண்டாடிவிட்டார் அவர். இந்நிலையில், அடுத்தடுத்து கமல்ஹாசனுக்கு வரும் வாய்ப்புகள் மிகப் பெரிய அளவிலான கூட்டணியை உருவாக்கியுள்ளது.

கமல்ஹாசன் அடுத்து யாருடன் இணைவார் என்பது யாரும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் அவர், மே மாதத்துடன் இந்த படத்திலிருந்து விடைபெறுகிறார். இதனைத் தொடர்ந்து அ.வினோத், மணிரத்னம், பா.ரஞ்சித், வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ், ராஜமவுலி என அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களுடன் சேர திட்டமிட்டிருக்கிறார்.

முதலில் இவர்களில் மணிரத்னம் படத்தில் இணைவார் என கூறப்பட்டது. இந்த படத்தில் மம்மூட்டி, ஷாருக்கான் உள்ளிட்ட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அ.வினோத்துடன் ஒரு படத்தில் இணைவார் என்று தகவல் வெளியானது. வினோத் கமல்ஹாசனுடனான படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளைத் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது இன்னொரு தகவலும் வெளிவந்தது. தங்கலான் படத்தை முடித்துக் கொண்டு மே மாத இறுதியில் கமல்ஹாசனுடன் இணைவார் பா.ரஞ்சித் என்று கூறுகிறார்கள். இடையில் வெற்றிமாறனும் கமல்ஹாசனுக்காக ஒரு ஸ்க்ரிப்டை தயார் செய்து வைத்து காத்திருக்கிறாராம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வெற்றிமாறன், பா.ரஞ்சித், தரணி, சந்தான பாரதி ஆகியோருடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் கமல்ஹாசன் விக்ரம் தோற்றத்தில் இருப்பதால் இந்த படம் பழையது என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோருடன் இணைவது உறுதி என்பது தெரியவந்துள்ளது.

Tags

Next Story