மாஸ் பிளான்! வேற லெவலில் திட்டமிடும் கமல்ஹாசன்! இதுமட்டும் நடந்தா?

மாஸ் பிளான்! வேற லெவலில் திட்டமிடும் கமல்ஹாசன்! இதுமட்டும் நடந்தா?
X
ஷங்கர், ஹெச் வினோத், மணிரத்னம் படங்களைத் தொடர்ந்து புதிய படத்தில் கமிட் ஆன கமல்ஹாசன். அதுவும் மாஸ் பிளான்!

ரூ.500 கோடி படத்தில் நடிக்கும் கமல்ஹாசன். அதுவும் வில்லனாக நடிக்க ரூ.150 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்களாம் என்கிற தகவல் கடந்த சில மாதங்களாகவே இணையத்தைச் சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக கமல்ஹாசன் வில்லனாக நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான கமல்ஹாசன், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான தேதிகளை இறுதியாக ஒதுக்கியுள்ளார். பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் கமல் ஹாசன் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய தொகையாக ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக ஆகியிருக்கிறார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் நட்சத்திர பலம் மற்றும் ப்ராஜெக்ட் கே படத்தின் பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது அவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது நியாயமானது என்று பேசப்படுகிறது.

ப்ராஜெக்ட் கே இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் ஒன்றாகும். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட தயாரிப்பு பட்ஜெட் ரூ. 500 கோடி. இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியில் இந்த படத்தை டப் செய்து வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

படத்தின் இசையை கவனிக்கிறார் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவை ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்சும், எடிட்டிங் பணியை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவும் கவனிக்கின்றனர்.

ப்ராஜெக்ட் கே 2023 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசனும் இந்த படக்குழுவில் இணைந்துள்ளதால், ப்ராஜெக்ட் K-ன் நடிகர்கள் பட்டியல் இப்போது பெரியதாகவும் சிறப்பாகவும் உருவாகியுள்ளது. பலவிதமான வேடங்களில் நடிக்கக்கூடிய பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் கமல்ஹாசன். அவர் தனது தனித்துவமான நடிப்பில் வில்லனாக எப்படி நடிக்க இருக்கிறார் என்பதை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!