KH234 க்கு விக்ரம் மாதிரி டைட்டில் டீசர்! ஷூட்டிங் எப்ப தெரியுமா?

KH234 க்கு விக்ரம் மாதிரி டைட்டில் டீசர்! ஷூட்டிங் எப்ப தெரியுமா?
X
இந்த படத்தில் நயன்தாரா இருக்கிறாரா இல்லையா? யார் அந்த பாலிவுட் நாயகி என்பது உள்பட பல அப்டேட்டுகளை விரைவில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். அதேநேரம் இந்த படத்திலும் விக்ரம் மாதிரி டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட இருக்கிறார்களாம்.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி பரவி வரும் நிலையில், இந்த படத்தில் இருந்து இன்னொரு அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா இருக்கிறாரா இல்லையா? யார் அந்த பாலிவுட் நாயகி என்பது உள்பட பல அப்டேட்டுகளை விரைவில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். அதேநேரம் இந்த படத்திலும் விக்ரம் மாதிரி டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட இருக்கிறார்களாம்.

கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணையப் போகிறார்கள். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மணிரத்னம், கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து நாயகன் மாதிரி வேறொரு படத்தைத் தர தயாராகிவிட்டார்கள். ஆனால் இம்முறை மிகப் பெரிய கமெர்ஷியல் சக்ஸஸ் வேண்டும் என எதிர்பார்த்து இணைந்திருக்கிறார்கள். உலகம் முழுக்க கொண்டாடப்படும் ஒரு கதையாக அதேநேரம் இந்தியர்களின் கதைக்களமாக ஒரு படத்தை தர காத்திருக்கிறார்கள்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய கமெர்ஷியல் பிளாக்பஸ்டராக அமைந்தது. இப்போது நடித்து வரும் இந்தியன் 2 படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகப் பெரிய எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இணையும் இரண்டாவது படம், நீண்ட நாளுக்கு பிறகு ஷங்கர் தமிழில் எடுக்கும் படம் என பல காரணங்களால் படத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது.

அ. வினோத் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் இதே ஆண்டு தயாரித்து நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். அதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கும் எனவும் கமல்ஹாசன் நடிக்க 35 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. | kamal haasan maniratnam movie update

இதனை அடுத்து மணிரத்னம் படத்தில் மிகப்பெரிய அளவிலான பிசினஸுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்களாம். கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க இதுவரை அவரிடம் பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை என்று தகவல் வந்துள்ளது. இதே படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதாம். ஆண்ட்ரியாவிடமும் இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. | kamal haasan movie heroine

தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் என 3 கதாநாயகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நாயகியே இல்லை என்கிறார்கள். | kamal haasan mani ratnam film

அந்த வகையில் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா, ஆண்ட்ரியாவுடன் இன்னொரு நடிகையும் இருக்கிறார் என்கிறார்கள். அவர் அநேகமாக பாலிவுட்டைச் சேர்ந்தவராக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இப்படி ஏகப்பட்ட செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டாலும் இந்த படத்தில் மணிரத்னத்தின் ஆஸ்தான நடிகை ஐஸ்வர்யா ராய் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கலாம் என்கிறார்கள். இந்த படத்திலும் விக்ரம் படத்தில் வெளியிட்டது போல டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அதனை வரும் மே மாதம் 20ம் தேதி படம்பிடிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. | kamal haasan mani ratnam new movie

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!