கமல்ஹாசன், மணிரத்னம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

கமல்ஹாசன், மணிரத்னம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
X

பைல் படம்.

கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘கேஎச்234’ படம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கமல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘கேஎச்234’ படம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அதாவது, கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு