Project K படத்தில் கமல்ஹாசன்! மாஸ் வீடியோ வெளியிட்டு உறுதி செய்த படக்குழு! அப்ப அதுவும் உண்மைதானா?

Project K படத்தில் கமல்ஹாசன்! மாஸ் வீடியோ வெளியிட்டு உறுதி செய்த படக்குழு! அப்ப அதுவும் உண்மைதானா?
X
பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

project k updates in tamil பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படத் தயாரிப்பு நிறுவனம். இதனால் இந்த படம் உலக அளவில் சென்றிருப்பதாக அந்நிறுவனம் புகழாரம் சூட்டியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகி மிகப் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் திரைப்பயணத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார். 4 வருடங்களுக்கு ஒரு படம் என நடித்தது போக இப்போது ஒரே வருடத்தில் 3, 4 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் அவருக்கான போர்சன்கள் கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள படப்பிடிப்பும் ஜூலை மாதத்துடன் முடிவடையும் என்கிறார்கள்.

இதனையடுத்து மணிரத்னம் படத்திலும், ஹெச் வினோத் படத்திலும் நடிக்கிறார் கமல்ஹாசன். அதற்குள் பான் இந்தியா படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இரு்கிறார் என்கிற தகவலும் வெளியானது. அந்த படம்தான் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே. ஆதிபுருஷ் படத்தின் படுதோல்வியால் பிரபாஸ் அடுத்த இரண்டு படங்களையும் மிகப் பெரிய அளவில் நம்பியிருக்கிறார்.

கேஜிஎஃப் இயக்குநரின் சலார் படமும், நாக் அஸ்வினின் புராஜெக்ட் கே படமும் அவருடைய இரண்டு கண்களாக இருக்கின்றன. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 100 நாட்களில் ரிலீஸ் ஆகும் என முன்னறிவுப்பும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இப்போது புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறார் என அந்த நிறுவனமே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

பிரபாஸ், தீபிகா, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. மேலும் இந்த படத்தில் அவர் முக்கியமான வில்லன் ரோல் நடிப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக இதுவும் நடக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைவார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!