டி.ராஜேந்தரை நலம் விசாரித்த கமல்ஹாசன்..!

டி.ராஜேந்தரை நலம் விசாரித்த கமல்ஹாசன்..!
X

டி.ராஜேந்திரனை சந்தித்து நலம் விசாரித்த கமலஹாசன்.

இயக்குநர் டிராஜேந்தரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.

இயக்குநர் டி.ராஜேந்தர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டிமிட்டிருந்த நிலையில் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வில் இருந்தார் டி.ராஜேந்தர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று(14/06/2022) வெளிநாடு புறப்படத் தயாரான நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் காலை டி.ராஜேந்தரை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது டி.ராஜேந்தர் மகன் குறளரசன் உடனிருந்தார்.

டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து பேசிய கமல்ஹாசன், "சிகிச்சை முடிந்து நன்கு குணமடைந்து திரும்பிடவேண்டும்" என்று வாழ்த்து கூறினார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தன்னை நேரில் வந்து சந்தித்த கமல்ஹாசனுக்கு நெகிழ்ந்து நன்றி கூறினார். டிராஜேந்தர், குறளரசனும் கமலுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்