KH233 story இப்படிப்பட்டதா? அப்ப விக்ரம விட மாஸா இருக்கும் போலியே!

KH233 story இப்படிப்பட்டதா? அப்ப விக்ரம விட மாஸா இருக்கும் போலியே!
X
கமல்ஹாசனும் ஹெச் வினோத்தும் இணையும் புதிய படத்தின் கதை எப்படிப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் படத்துக்கு முன்னதாக கமல்ஹாசன் ஹெச் வினோத் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாக தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஹெச் வினோத் - கமல்ஹாசன் இணையும் KH233 படத்தின் கதையும் தெரியவந்துள்ளது.

விக்ரமை விட படு மாஸாக இந்த படம் தயாராக இருப்பதும் இதன் வியாபாரம் உலக அளவில் நடக்க இருப்பதும் தகவலாக பரவி வருகிறது. ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்துக்கான உரிமையை 125 கோடிக்கு விலை பேசியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

விக்ரம் படத்துக்கு பிறகு கமல்ஹாசனின் பிசினஸ் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்தியன் 2 படத்துக்கான வியாபாரமும் பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் ஹெச் வினோத் திரைப்படத்துக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஹெச் வினோத் எழுதி இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் ஒரு வீடியோவும் தற்போது வரை வெளியாகியுள்ளது.

ரைஸ் டூ ரூல் எனும் டேக்லைனில் துப்பாக்கிகளும் குண்டுகளும் நிறைந்த இந்த வீடியோ வேற லெவலுக்கு வைரலானது கமல்ஹாசனுக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம். இதனால் வரும் அக்டோபர் முதல் படத்தை உருவாக்க புறப்பட்டுவிடலாம் என பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு அதனிடையே இந்த படத்தில் நடிக்க இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் கமல்ஹாசன் கெட்டப் எதுவும் சஸ்பென்ஸாக வைக்கப்படப்போவதில்லை என்பது தெளிவாகிறது. இப்போது கமல்ஹாசன் ஒரு புதிய கெட்டப்பில் இருக்கிறார் அது லியோ படத்தில் கேமியோவுக்காகவா அல்லது பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்துக்காகவா என்பது தெரியவில்லை.

கமல்ஹாசன் 233 படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக தீவிரவாதிகளைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்டாக பணிபுரிந்து ரிட்டயர்டு ஆனவராக நடிக்க இருக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது.

படத்தின் கதை கிட்டத்தட்ட இந்தியாவில் நடைபெற்ற ஒரு தீவிரவாத தாக்குதலை பேசும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இது விஸ்வரூபம் படத்தின் சாயலில் வேறொரு கோணத்தில் சென்டிமெண்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து மணிரத்னம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா அல்லது வித்யாபாலன் ஆகியோரில் ஒருவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரும் படத்தில் இருப்பார்கள் என்று தகவல் வந்த வண்ணம் இருக்கின்றன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!