துப்பாக்கி பயிற்சி... கமல்ஹாசனை வைத்து வலிமை பார்ட் 2? ஹெச் வினோத்தின் அசத்தல் பிளான்!

துப்பாக்கி பயிற்சி... கமல்ஹாசனை வைத்து வலிமை பார்ட் 2? ஹெச் வினோத்தின் அசத்தல் பிளான்!
X
கமல்ஹாசனும் ஹெச் வினோத்தும் இணையும் அடுத்த படத்தின் கதை, வலிமை படத்தைப் போல இருக்குமாம்.

கமல்ஹாசனை வைத்து வலிமை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறாரா ஹெச் வினோத் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோதான்.

ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய படத்துக்கு கமல்ஹாசன் தயாராகும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. KH233 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்.

கமல்ஹாசன் - ஹெச் வினோத் இணையும் புதிய படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதால், அவரின் அடுத்த படத்துக்கு மிகப் பெரிய பிசினஸ் ஏற்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசனின் முந்தைய படமான விக்ரம் படத்துக்கும் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு இருந்ததால் இவர்கள் இணையும் அடுத்த படத்துக்கு மிகப் பெரிய கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங்கே இன்னும் திட்டமிடப்படாத நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த படத்தைப் பற்றிய தகவல்கள் இப்போது வரும் அப்போது வரும் என பேசப்பட்ட நிலையில், ஹெச் வினோத் பிறந்தநாளில் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாமதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரைஸ் டூ ரூல் எனும் வாசகம் இடம்பெற்றுள்ளதாலும் வீடியோவில் இசை வெறித்தனமாக இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் கதையமைப்பு என்பது வலிமை படத்தைப் போல இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கதை என்றும் அதனை தழுவி திரைக்கதை எழுதியிருக்கிறார் ஹெச் வினோத் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!