பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!
X
பிக்பாஸ் சீசன் 7: போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் அளித்த சுவாரஸ்ய பரிசு

விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆகிய பிக்பாஸ் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் 18 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் அளித்த சுவாரஸ்ய பரிசு குறித்து இங்கே பார்க்கலாம்.

போட்டியாளர்கள்

இந்த சீசனில் மொத்தம் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆண் போட்டியாளர்கள்:

  • விஜய் வர்மா
  • சரவண விக்ரம்
  • கூல் சுரேஷ்
  • யுகேந்திரன்
  • நிக்சன்
  • பிரதீப் ஆண்டனி
  • மணி சந்திரா
  • விஷ்ணு விஜய்
  • பாவா செல்லத் துரை

பெண் போட்டியாளர்கள்:

  • ஐஷு
  • விசித்ரா
  • ரவீனா
  • பூர்ணிமா ரவி
  • ஜோவிகா
  • வினுஷா தேவி
  • அக்ஷயா உதயகுமார்
  • மாயா கிருஷ்ணன்
  • அனன்யா ராவ்

ராட்சசன் பட புகழ் ரவீனாவுக்கு பட்டர்பிளை ரிங் ஒன்றை கமல் பரிசாக கொடுத்து அனுப்பினார்.


நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கை பரிசாக கொடுத்தார் கமல்ஹாசன்.


தனி இசை கலைஞர் நிக்சனுக்கு கண்ணாடியை கொடுத்தார் கமல்.


பாரதி கண்ணம்மா 2 சீரியல் கதாநாயகி வினுஷா தேவிக்கு கருப்பு வைரத்தை பரிசாக கொடுத்தார்.


நடனக் கலைஞர் மணி சந்திராவுக்கு குருநாதா எனும் வாசகம் அடங்கிய டீசர்ட்டை கமல் பரிசாக கொடுத்தார்.


அக்ஷயா உதயகுமாருக்கு கற்றாழை செடியை பரிசாக வழங்கினார்.


நடிகை வனிதா மகள் ஜோவிகாவுக்கு அவருடைய தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.


அமீரின் தோழியும் டான்சருமான ஐஷுவுக்கு A என்கிற எழுத்துடன் கூடிய ஜாக்கெட்டை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்.


விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனுக்கு ஜோக்கர்கள் மூக்கில் அணியும் சிகப்பு நிற பந்தை பரிசாக வழங்கினார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சரவண விக்ரம் கட்டப்பையை பரிசாக வழங்கியுள்ளார்.


பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கு அவரது தந்தை பயன்படுத்திய கண்ணாடியையே பரிசாக வழங்கினார்.


சீரியல் நடிகர் விஷ்ணுவுக்கு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக வழங்கினார்.


எழுத்தாளர் பாவா செல்லத்துரைக்கு நோட்டு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.



Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு