அஜித் படத்துக்கு கமல் கொடுத்த ஐடியா!

அஜித் படத்துக்கு கமல் கொடுத்த ஐடியா!
X
அஜித் படத்தின் இயக்குநருக்கு கமல்ஹாசன் கொடுத்த யோசனையால் அந்த படம் வேற லெவலுக்கு உருவாகியுள்ளதாக தகவல்.

கமல்ஹாசன் கொடுத்த ஐடியாவால்தான் அஜித்தின் படம் வேற லெவலுக்கு உருவானது என அந்த படத்தின் இயக்குநரே பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவரது படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றன. அஜித்தின் சமீபத்திய படமான "துணிவு" வெற்றிகரமாக ஓடியது. தற்போது அவர் "விடாமுயற்சி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித் நடித்த "சிட்டிசன்" படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா பற்றி தெரியவந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா அளித்த பேட்டியில் கூறியதாவது:

"முகவரி படத்துக்கு பிறகுதான் அஜித்தின் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ஆவது நாளில் நடிக்க வந்த படம்தான் சிட்டிசன் திரைப்படம். அந்த சமயத்தில் தனது திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக கமல் ஹாசனை பார்க்க சென்றார் அஜித்.

கமல் ஹாசன் அஜித்தை பார்த்ததும் சிட்டிசன் என்று சொல்லி அழைத்தார். அப்போது படம் குறித்து நிறைய விஷயங்களை இரண்டு பேரும் பேசியிருக்கிறார்கள். அந்த உரையாடலின்போது, ஹேராம் படத்தில் எனக்கு மேக்கப் போட்டவர்களை வேண்டுமானால் இந்தப் படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். அற்புதமாக பணியாற்றுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

கமல் ஹாசன் அப்படி சொல்லும்வரை சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு மேக்கப் போடுவதற்கு; இந்தியன் படத்தில் மேக்கப் போட்டவர்களை பயன்படுத்தத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கமல் ஹாசனே இப்படி சொல்லிவிட்டதால் உடனடியாக ஹேராம் படத்துக்கு மேக்கப் போட்டவர்களை கமிட் செய்துவிட்டோம்" என்று அவர் கூறினார்.

அஜித் நடித்த படங்களில் சிட்டிசன் படம் முக்கியமானது. பல கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார் அவர். முக்கியமாக படத்தின் கதையும் சமூக அக்கறை கொண்டதாக இருக்கும்.

சிட்டிசன் படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. இதில் அஜித், வசுந்துரா தாஸ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் இப்போது கமர்ஷியல் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் 2000களின் ஆரம்பத்தில் அவரது கதை தேர்வு வித்தியாசமாகவே இருந்தன. அந்த மாதிரியும் அவர் இப்போது நடிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களிள் ஒரு தரப்பினருக்கு மிகப்பெரிய ஆசையாக இருப்பது கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சி படத்தின் அப்டேட்

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, படத்தின் ஷூட்டிங் குறித்து சமீபத்தில் கூறியதாவது:

"படத்தின் ஷூட்டிங் நல்ல விதமாக நடந்து வருகிறது. அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாக இருக்கும். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

விடாமுயற்சி படம் அஜித்தின் 62வது படமாகும். படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!